Advertisement


மகன் பாசத்தில் சானியா மிர்சா

மே 09, 2020 22:03
 Comments  
 


Sania Mirza, Izhaan, Tennis, India
 

மும்பை: அன்னையர் தினம் கொண்டாடும் தருணத்தில், செல்ல மகனுடன் காலை பொழுது விடியும் படத்தை வெளியிட்டுள்ளார் சானியா.

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 2010ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்தார். 2018ல் மகன் இஜான் பிறந்தான். கொரோனா பிரச்னை காரணமாக, தற்போது வீட்டில் இருக்கும் சானியா, மகனுடன் பொழுதை போக்கும் படங்களை அவ்வப்போது சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். 

நேற்று ‛டுவிட்டர்’, ‘இன்ஸ்டாகிராமில்’ வெளியிட்ட படத்தில், காலை நேரத்தில் செல்ல மகனை வாரி அணைத்தவாறு படுக்கையில் இருக்கும் பாசமான தருணத்தை பதிவிட்டிருந்தார். அதில்,‘நாங்கள் இப்படித்தான் கண் விழிப்போம். இதை தவிர வேறு வழியில் எழுந்திருக்க வாய்ப்பு இல்லை’ என குறிப்பிட்டுள்ளார். சானியாவுடன் இஜான் புன்னகை பூக்க இருக்கும் இப்படம் அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது. 

இன்று அன்னையர் தினம் கொண்டாடும் வேளையில், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. ‘அம்மாவை போல மகன்’, ‘பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது’, நீங்கள் சூப்பர் அம்மா சானியா... மற்றவர்களுக்கு ஊக்கம் அளிக்கிறீர்கள்’ என வெகுவாக பாராட்டியுள்ளனர். ‘இன்ஸ்டாகிராமில்’ 1.63 லட்சம் பேர் ‘லைக்’ செய்துள்ளனர். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?