Advertisement


தடுப்பூசி பயன்படுத்துவாரா ஜோகோவிச்: நடால் ‘அட்வைஸ்’

மே 09, 2020 21:53
 Comments  
 


Rafael Nadal, Spain, Novak Djokovic, Serbia, Tennis, Corono Virus Vaccine
 

மாட்ரிட்: ‘‘கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கினால், ஜோகோவிச் அதனை பயன்படுத்தியாக வேண்டும்,’’ என, ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக விளையாட்டு நட்சத்திரங்கள் வீட்டில் ஓய்வில் உள்ளனர். இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை போட்டிகள் நடப்பது சந்தேகமாக உள்ளது. ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் வீரர், வீராங்கனைகள் வெளிநாடுகளில் போட்டியில் பங்கேற்க செல்ல வேண்டும் என்பதால், தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வேண்டியது அவசியம்.

சமீபத்தில் உலகின் ‘நம்பர்–1’ செர்பிய டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் 32, கொரோனா தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 

இதுகுறித்து உலகின் ‘நம்பர்–2’ ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் கூறுகையில், ‘‘விளையாட்டு நட்சத்திரங்கள் போட்டியில் பங்கேற்க கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கினால், அனைவரும் பயன்படுத்தியாக வேண்டும். உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று டென்னிஸ் விளையாட ஜோகோவிச், தடுப்பூசி போட வேண்டியிருக்கும். ஏ.டி.பி., அல்லது சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு (ஐ.டி.எப்.,) கூறும் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றியாக வேண்டும்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?