Advertisement


‘நம்பர்–1’ லட்சியத்தில் பியான்கா

மே 07, 2020 22:19
 Comments  
 


US Open Winner, canada, Bianca Andreescu Stays Focused on Becoming World No 1
 

டொரன்டோ: ‘‘டென்னிஸ் அரங்கில் எப்படியும் ‘நம்பர்–1’ இடத்தை பெறுவது தான் லட்சியம்,’’ பியான்கா தெரிவித்தார்.

கனடா டென்னிஸ் வீராங்கனை பியான்கா 19. கடந்த ஆண்டு யு.எஸ்., ஓபனில் கோப்பை வென்று அசத்திய இவர், இடது முழங்கால் காயம் காரணமாக அடுத்தடுத்த தொடர்களில் பங்கேற்கவில்லை. ஆஸ்திரேலிய ஓபனிலும் களமிறங்கவில்லை.

தற்போது ‘நம்பர்–6’ இடத்திலுள்ள இவர் கூறியது:

டொரன்டோவில் சூழ்நிலை கடினமாக உள்ளது. பூங்காக்கள் பூட்டிக் கிடக்கின்றன. டென்னிஸ், கூடைப்பந்து என எதுவும் விளையாடப்படவில்லை. ஆனாலும் என்னால் முடிந்தவரை மனதளவில் சீராக இருக்க முயற்சிக்கிறேன். ஏனெனில் நமது மனம் மிக சக்தி வாய்ந்தது.

யு.எஸ்., ஓபன் தொடர் குறித்து அடுத்த மாதம் முடிவு செய்யப்பட உள்ளது. என்ன நடக்கும் எனத் தெரியவில்லை. இருப்பினும் என்னால் முடிந்தவரை சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன். தோல்வியடைவது எனக்குப் பிடிக்காது.

ஒவ்வொரு கிராண்ட்ஸ்லாம் தொடரில் அசத்த வேண்டும். ஏனெனில் உலகின் ‘நம்பர்–1’ வீராங்கனை ஆக வேண்டும். இது தான் எனது லட்சியம்.

இவ்வாறு பியான்கா கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?