Advertisement


போலீஸ் ஆன தமிழ் ‘தலைவா’ * கபடி கேப்டன் அஜய் தாகூர் அசத்தல்

மார்ச் 26, 2020 21:43
 Comments  
 


Kabaddi star Ajay Thakur performs police duty in Himachal Pradesh during coronavirus lockdown
 

பிலாஸ்புர்: மக்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த போலீஸ் பணிக்கு மாறினார் தமிழ் தலைவாஸ் கபடி அணி கேப்டன் அஜய் தாகூர். 

இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் அஜய் தாகூர் 33. இவரது தலைமையில் இந்திய அணி ஆசிய விளையாட்டில் தங்கம், உலக கோப்பை தொடர் சாம்பியன் ஆனது. கபடி விளையாட்டில் பத்ம ஸ்ரீ விருது (2019) வென்ற ஒரே வீரர். 

புரோ கபடி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி கேப்டனாக உள்ளார். இத்தொடரில் அதிக ‘ரெய்டு’ புள்ளிகள் பெற்ற வீரர்களில் நான்காவதாக உள்ளார் அஜய் தாகூர் (790). இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர். கடந்த 2017 முதல் ‘டெபுட்டி சூப்பிரடெண்ட்’ ஆக நியமனம் செய்யப்பட்டார். 

இதனிடையே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்படுகிறது. இதை அமல்படுத்த போலீசார் போராடி வருகின்றனர். இதையடுத்து செயலில் இறங்கிய அஜய் தாகூர், பிலாஸ்புர் பகுதி போலீசாருடன் இணைந்து தெருக்களில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வருகிறார். 

இதுகுறித்து அஜய் தாகூர் கூறுகையில்,‘‘கொரோனா வைரஸ் பிடியில் இருந்து தப்பிக்க அரசின் அறிவிப்பை பின்பற்றுவது தான் சிறந்த வழி. இல்லையென்றால் இதில் இருந்து மீள முடியாது. தயவு செய்து எல்லோரும் வீட்டில் தங்க வேண்டும். இதை மற்றவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். அரசிற்கு ஒத்துழைப்பு தாருங்கள்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?