Advertisement


தாமதமாகும் பயஸ் ஓய்வு * 2021 ஒலிம்பிக்கில் பங்கேற்க முடிவு?

மார்ச் 26, 2020 21:21
 Comments  
 


Tokyo postponement could delay retirement for Leander Paes
 

மும்பை: டோக்கியோ ஒலிம்பிக் ஒத்தி வைக்கப்பட்டதால் லியாண்டர் பயஸ் ஓய்வு ஓராண்டு தாமதம் ஆகும் எனத் தெரிகிறது.

இந்திய டென்னிஸ் ‘சீனியர்’ லியாண்டர் பயஸ் 46. கடந்த 1991ல் சர்வதேச அரங்கில் கால்பதித்தார். ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 73வது இடத்துக்கு உயர்ந்தார். கிராண்ட்ஸ்லாம் அரங்கில் ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையரில் மொத்தம் 18 கோப்பை வென்றுள்ளார்.

1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் கைப்பற்றி அசத்தினார். டேவிஸ் கோப்பை அரங்கில் இரட்டையர் போட்டியில் அதிக வெற்றி பெற்ற வீரர் இவர் தான். கடந்த 1992ல் முதன் முதலில் ஒலிம்பிக்கில் (பார்சிலோனா) பங்கேற்ற பயஸ், 8வது முறையாக ஒலிம்பிக்கில் (டோக்கியோ) பங்கேற்ற பின் ஓய்வு பெற காத்திருந்தார்.

தற்போது ஒலிம்பிக் ஓராண்டு ஒத்தி வைக்கப்பட்டதால், பயஸ் ஓய்வும் தள்ளிப் போகிறது. இதுகுறித்து பயஸ் கூறியது:

ஓய்வு என்பதை நினைத்தாலே எனக்கும், எனது அணியினருக்கும் கடினமாக இருக்கும். முடிந்த வரை நீண்ட நாட்கள் விளையாட வேண்டும் என்பதில் என் அப்பா ஆர்வமாக உள்ளார். ஏனெனில் ஓய்வு பெற்று விட்டால் மீண்டும் விளையாட மாட்டேன் என அவருக்கு நன்கு தெரியும்.

இப்போதுள்ள நிலையில் எனது ‘பிட்னஸ்’ அப்படியே தான் உள்ளது.

இதை தொடர கடுமையாக முயற்சித்து வருகிறேன். அதேநேரம் டென்னிசை பொறுத்தவரையில் மனதளவில் தயாராக வேண்டும் என்பது மிக முக்கியம். தற்போது ஒலிம்பிக்கிற்கு ஓராண்டு இடைவெளி உள்ளது. இதற்கேற்ப எனது பயிற்சி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இது தான் தொடர்ந்து என்னை புத்துணர்ச்சியுடன் செயல்பட வழிவகுக்கும்.

இருப்பினும் அடுத்த ஒலிம்பிக்கில் பங்கேற்கலாமா அல்லது ஓய்வு பெறலாமா என்பது குறித்து விரைவில் அறிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?