Advertisement


உலக தகுதி செஸ்: பாதியில் நிறுத்தம் * ‘கொரோனா’ எதிரொலி

மார்ச் 26, 2020 21:13
 Comments  
 


COVID 19 pandemic, FIDE stops Candidates tournament after Russia bans flights
 

எக்டெரின்பர்க்: கொரோனா அச்சத்தால் கேன்டிடேட்ஸ் செஸ் தொடர் ஏழாவது சுற்றுடன் நிறுத்தப்பட்டது. வேறு தேதியில் மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

ரஷ்யாவில் ‘கேன்டிடேட்ஸ்’ செஸ் தொடர் நடக்கிறது. உலகின் முன்னணி வீரர்கள் 8 பேர் இதில் பங்கேற்றனர். ‘ரவுண்டு ராபின்’ முறையில் ஒவ்வொருவரும் மற்ற வீரர்களுடன் தலா இரண்டு முறை மோதினர்.

சாம்பியன் ஆகும் வீரர், இந்த ஆண்டு நடக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான போட்டிக்கு தகுதி பெறுவர். நடப்பு சாம்பியன் மற்றும் கடந்த 2013 முதல் உலகின் ‘நம்பர்–1’ வீரராக இருக்கும் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சனுடன் மோதலாம்.

ஏழாவது சுற்றில் ரஷ்யாவின் நேபோம்னியாட்சி, சக வீரர் மேக்சிம் வாசியரை சந்தித்தார். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய நெபோம்னியாட்சி, 42வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். மற்ற வீரர்கள் மோதிய மூன்று போட்டிகள் ‘டிரா’ ஆகின.

ஏழு சுற்று முடிவில் ரஷ்யாவின் மேக்சிம் வாசியர் (4.5) முதலிடத்துக்கு முன்னேறினார்.  நேபோம்னியாட்சி (4.5) இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

திடீர் நிறுத்தம்

நேற்று எட்டாவது சுற்று நடக்க இருந்தது. இந்நிலையில் ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்துக்கு திடீரென தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து கேன்டிடேட்ஸ் செஸ் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து சர்வதேச செஸ் நிர்வாகக்குழு வெளியிட்ட அறிக்கை:

ரஷ்ய அரசு எவ்வித கால அவகாசமும் கொடுக்காமல் உடனடியாக விமான போக்குவரத்தை ரத்து செய்தது. வீரர்கள், நிர்வாகிகள் சரியான நேரத்துக்கு பாதுகாப்பாக வீடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனிமேலும் போட்டிகளை தொடர்ந்து நடத்த முடியாது. இதனால் கேன்டிடேட்ஸ் தொடர் நிறுத்தப்படுகிறது. வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்த பிறகு, மீண்டும் 8 வது சுற்றில் (மொத்தம் 14) இருந்து போட்டிகள் தொடர்ந்து நடக்கும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?