Advertisement


இந்தியாவில் ‘உலக’ கால்பந்து நடக்குமா: என்ன சொல்கிறது ‘பிபா’

மார்ச் 25, 2020 22:05
 Comments  
 


Womens FIFA U17 World Cup, India
 

புதுடில்லி: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் நடக்கவுள்ள பெண்களுக்கான (17 வயது) உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தியாவில், 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடரின் 7வது சீசன் வரும் நவ. 2–21ல் நடக்கிறது. இதில் இந்தியா, ஜப்பான், வடகொரியா உட்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இத்தொடர் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் வரும் ஜூலை 24ல் துவங்க இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதுகுறித்து சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து ‘பிபா’ உள்ளூர் அமைப்பு குழு கண்காணித்து வருகிறது. இதன் முடிவை அடிப்படையாக கொண்டு உலக கோப்பை தொடர் நடத்தப்படும். இத்தொடரில் பங்கேற்கும் வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள், பார்வையாளர் ஆகியோரின் உடல் நலன், பாதுகாப்பு கருதி முடிவு எடுக்கப்படும். ஒருவேளை தொடரை நடத்த முடியாமல் போனால் மாற்று தீர்வு கண்டறியப்படும்,’’ என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?