Advertisement


கொரோனாவை விரட்ட கவனம் * நீரஜ் சோப்ரா அறிவுறுத்தல்

மார்ச் 25, 2020 21:47
 Comments  
 


Neeraj Chopra, Vikas Krishan welcome Olympic postponement, say focus   should be COVID 19 right now
 

புதுடில்லி: ‘‘ஒலிம்பிக் தள்ளி வைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. கொரோனா வைரசை விரட்டுவதில் இனி கவனம் செலுத்தலாம்,’’ என ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்தார்.

இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 22. தென் ஆப்ரிக்காவில் நடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு, டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார். இதற்கான ஜோர்டனில் பயிற்சியில் ஈடுபட்ட இவர், கொரோனா வைரஸ் பரவலால் நாடு திரும்பிய இவர், தனிமையில் உள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் குறித்து இவர் கூறியது:

ஒலிம்பிக்கை தள்ளி வைத்தது என்னைப் பொறுத்தவரை வரவேற்கத்தக்க விஷயம் தான். ஏனெனில் இப்போதுள்ள சூழலில் போட்டியை நடத்துவது என்பது சரியான செயல் அல்ல. இன்னும் ஒரு ஆண்டு உள்ள நிலையில் இதற்குத் தகுந்து திட்டமிட்டு ஒலிம்பிக்கிற்கு தயாராக வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்கு வராத பட்சத்தில், அடுத்த சில மாதத்துக்கு பயிற்சியில் சற்று பாதிப்பு ஏற்படும். இது போன்ற சூழ்நிலை அனைத்து நட்சத்திரங்களுக்கும் ஏற்படும்.

இப்போதுள்ள நிலையில் எங்களைப் போன்ற நட்சத்திரங்கள் உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். சவாலான கொரோனா வைரசை விரட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும். இதன் பின் சூழ்நிலையை பொறுத்து ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகலாம்.

இவ்வாறு நீரஜ் சோப்ரா கூறினார்.

கூடுதல் அவகாசம்

ஒலிம்பிக்கில் இரு முறை பங்கேற்ற இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஷ் கிருஷ்ணன் கூறுகையில்,‘‘ ஒலிம்பிக்கை தள்ளி வைத்தது எங்களுக்கு பாதிப்பு தான் என்றாலும், தற்போது கிடைத்துள்ள கூடுதல் கால அவகாசம், ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்தை அடைய சிறப்பாக தயாராக உதவும்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?