Advertisement


இந்திய கால்பந்து வீரர் மரணம்

மார்ச் 25, 2020 20:58
 Comments  
 


Abdul Latif, Former India Footballer, Died
 

கோல்கட்டா: முன்னாள் இந்திய கால்பந்து வீரர் அப்துல் லத்தீப் காலமானார்.

கர்நாடகா மாநிலம் மைசூருவில் பிறந்த முன்னாள் இந்திய கால்பந்து வீரர் அப்துல் லத்தீப் 73, அசாம் மாநிலம் கவுகாத்தியில் வசித்து வந்தார். கடந்த 1970ல் பாங்காக்கில் நடந்த ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். தவிர இவர், ஆசிய கோப்பை தகுதிச் சுற்று (1968, மியான்மர்), மெர்தேகா கோப்பை (1969, கோலாலம்பூர்) தொடர்களில் இந்தியாவுக்காக விளையாடி உள்ளார். கடந்த 1963–67ல் உள்ளூர் போட்டிகளில் முகமதியன் ஸ்போர்டிங் கிளப் அணிக்காக விளையாடினார். பின் 1978–80ல் அந்த அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார்.

இந்நிலையில் அப்துல் லத்தீப், கவுகாத்தியில் உள்ள தனது வீட்டில் வயது முதிர்வு காரணமாக மரணமடைந்தார். இவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?