Advertisement


விதிமுறையை மீறினால் சிறை: காம்பிர் எச்சரிக்கை

மார்ச் 23, 2020 20:42
 Comments  
 


Gautam Gambhir, India, Cricket, Warned, Quarantine Offenders, Corono Virus
 

புதுடில்லி: ‘‘மத்திய, மாநில அரசுகளின் சுய ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும்,’’ என, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கையாக, இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 22ல் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அப்போது சிலர் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே சுற்றியது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் காம்பிர் கூறுகையில், ‘‘கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்ப, நாம் அனைவரும் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும். இதற்காக மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். வதந்திகளை பரப்பக்கூடாது. நாம், பல கோடி மக்களின் உயிரை காக்க போராடுகிறோம், வாழ்வாதாரத்திற்காக அல்ல. விதிமுறையை மீறுபவர்களே, வீட்டில் பாதுகாப்பாக இருக்க விரும்புகிறீர்களா அல்லது சிறைக்கு செல்கிறீர்களா,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?