Advertisement


என் பெயர் எங்கே: ரோகித் கேள்வி

மார்ச் 22, 2020 22:11
 Comments  
 


Someone missing here, Rohit takes dig at ICC after pull shot poll leaves him out
 

புதுடில்லி: ஐ.சி.சி., வெளியிட்ட ‘புல் ஷாட்’ அடிக்கும் சிறந்த வீரர்கள் பட்டியலில், தனது பெயர் இல்லாதது குறித்து ரோகித் கேள்வி எழுப்பி உள்ளார். 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), ‘டுவிட்டரில்’ ரசிகர்களிடம் கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தது. அதில், கீழே தரப்பட்டுள்ள பட்டியலில் ‘புல் ஷாட்’ அடிக்கும் முன்னாள், தற்போதைய வீரர்களில் உங்கள் தேர்வு என்ன, என கேட்டிருந்தது. இப்பட்டியலில், விண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ், இந்திய கேப்டன் கோஹ்லி இடம் பெற்றிருந்தனர். ஆனால், ‘புல் ஷாட்’ அடிப்பதில் கைதேர்ந்த இந்திய வீரர் ரோகித் சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை. 

இது குறித்து ரோகித் ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘ நீங்கள் குறிப்பிட்டுள்ள பட்டியலில் ஒரு பெயர் ‘மிஸ்’ ஆகி உள்ளது. வீட்டில் இருந்தபடியே பணி புரிவது எளிதானது அல்ல என்பது புரிகிறது. கடினமான காலகட்டத்தில், நமது பூமித்தாய் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால், பாதிப்பிலிருந்து மீண்டு வரலாம்,’ என, தெரிவித்துள்ளார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?