Advertisement


கால்பந்து ரசித்தோம்... மீன் ருசித்தோம்

மார்ச் 22, 2020 20:31
 Comments  
 


Football lessons to eating bony fish, Harjinder recalls unmatched PK
 

புதுடில்லி: ‘‘பி.கே.பானர்ஜி வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தபோது, மீன் சாப்பிட்ட அனுபவம் மறக்க முடியாதது,’’ என, இந்திய முன்னாள் கால்பந்து வீரர் ஹர்ஜிந்தர் தெரிவித்தார்.

இந்திய கால்பந்து அணி முன்னாள் கேப்டன், பயிற்சியாளர் பி.கே.பானர்ஜி. ஜாம்பவானாக திகழ்ந்த இவர், சமீபத்தில் 83 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். 

இவரது நினைவுகள் குறித்து, முன்னாள் கால்பந்து வீரர் ஹர்ஜிந்தர் கூறியது: தனது வீட்டிற்கு இரவு விருந்து சாப்பிட வருமாறு பி.கே.பானர்ஜி அழைத்திருந்தார். சாப்பாடு தட்டில் மீன் பரிமாறப் பட்டிருந்தது. பஞ்சாப்பை சேர்ந்த எனக்கு, மீன் உணவு சாப்பிட்டு பழக்கமில்லை. மீன் முள்ளை எப்படி எடுப்பது என்பதும் தெரியாது. இதை, பானர்ஜியிடம் தெரிவித்தேன். 

எவ்வித தயக்கமும் இல்லாமல், தனது மனைவியை அழைத்தார். மீன் முள்ளை அகற்றி, சதை பகுதியை பிரித்து தர அறிவுறுத்தினார். 

எனது வீட்டிற்கு உங்களை அழைத்துவிட்டு, மீன் சாப்பிடாமல் போனால் நன்றாக இருக்குமா, என கேள்வி கேட்டார். இவரது  விருந்தோம்பல் மற்றும் சக மனிதருக்கு இவர் தந்த மரியாதையை எண்ணி, வியந்து போனேன்.

தெளிவான பேச்சு

கடந்த 1979ல் கோல்கட்டாவுக்கு குடி பெயர்ந்தேன். சில நாட்கள் காயத்தால் அவதிப்பட்டேன். எனது உடல்நிலை குறித்து அடிக்கடி விசாரிப்பார். எத்தனையோ பயிற்சியாளர்களிடம் பழகி இருக்கிறேன். பி.கே.பானர்ஜியை போல ஒரு பயிற்சியாளரை பார்த்தது இல்லை. இவருடன் கால்பந்து விஷயங்களை ரசித்து பேசினேன். கால்பந்து நுணுக்கம் அறிந்தவர். அதை மற்றவர்களுக்கு தெளிவாக எடுத்துரைப்பதில் கைதேர்ந்தவர். 

இவரது இறப்பு செய்தியால் அதிர்ந்து போனேன். பி.கே.பானர்ஜி உடன் பேசிய நாட்கள் இன்னும் மனதில் நிலைத்துள்ளன. இவ்வாறு ஹர்ஜிந்தர் கூறினார்.

ஊக்கம் தந்தவர்

இந்திய முன்னாள் வீரர், தற்போதைய துணை பயிற்சியாளர் சண்முகம் வெங்கடேஷ் கூறுகையில்,‘‘ இந்திய கால்பந்தில் ஜாம்பவானாக பி.கே.பானர்ஜி திகழ்ந்தார். வீரர்களுக்கு ஊக்கம் தரும் நபராக இருந்தார். எந்த வீரரிடம் எப்படி பேச வேண்டும் என அறிந்து வைத்திருந்தார். பல போட்டிகளில் விளையாடி இருந்ததால், நெருக்கடியான நிலையை எப்படி சமாளிப்பது என்பதை தெரிந்திருந்தார்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?