Advertisement


இந்திய அரசுக்கு சானியா பாராட்டு

மார்ச் 21, 2020 18:40
 Comments  
 


India, Tennis player, sania mirza, corona, covid 19
 

ஐதராபாத்: ‘‘வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மத்திய அரசு மற்ற நாடுகளை விட சிறப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது,’’ என சானியா மிர்சா தெரிவித்தார்.

இந்தியாவில் ‘கொரோனா’ வைரஸ் பரவி வருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இன்று நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க உள்ளனர்.

இதுகுறித்து மகன் இஷானுடன் ஐதராபாத்தில் தங்கியுள்ள இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியது:

இந்தியாவில் ஏறக்குறைய மக்கள் கூடும் பெரும்பாலான இடங்கள் மூடப்பட்டுள்ளன.  இந்த வாய்ப்பை குடும்பத்தினருடன் நேரம் செலவிட பயன்படுத்திக் கொள்ளலாம். உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டதால், வீட்டிலேயே பயிற்சியில் ஈடுபடலாம்.

இந்தியானா டென்னிசிற்காக கலிபோர்னியா சென்ற பிறகு தான், தொடர் ரத்தானது தெரியவந்தது. மீண்டும் இந்தியாவுக்கு திரும்பிய போது விமான நிலையத்தில் காய்ச்சல் பரிசோதனை, எந்த நாடுகளுக்கு சென்றீர்கள் என பல கேள்விகள் கேட்டனர். 

மோசமாக பாதித்த நாடுகளுக்கு செல்லவில்லை என்பதால்,விரைவில் வீடு திரும்பினேன். அடுத்து சுகாதாரத்துறையினர் வீட்டுக்கு வந்து சோதனை செய்தனர். உண்மையில் ‘கொரோனா’ வைரசை தடுக்கும் முயற்சியில், மற்ற நாடுகளை விட  இந்திய அரசு சிறப்பாக செயல்படுகின்றது. 

இவ்வாறு அவர் கூறினார்.

 

முதியவர்களுக்கு உதவுங்கள்

சானியா மிர்சா கூறுகையில்,‘‘வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ள முதியவர்களுக்கு, தேவையான பொருட்களை இளம் வயதினர், முடிந்த அளவு வாங்கிக் கொடுத்து உதவி செய்யுங்கள். ஒருவர் மீது ஒருவர் கவனம் செலுத்தி, ஆரோக்கியமாக இருங்கள்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?