Advertisement


ரோமா கால்பந்து வீரர்கள் நிதி உதவி

மார்ச் 21, 2020 18:27
 Comments  
 


roma soccer clun team, coronavirus roma
 

ரோம்: கொரோனா தாக்கத்திற்கான சிகிச்சைக்கு உதவும் வகையில், ரோமா கால்பந்து கிளப் அணி வீரர்கள் நிதி உதவி அளித்துள்ளனர். 

கொரோனா வைரசால் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி மாறி உள்ளது. அரசு சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டாலும், கூடுதலாக நிதி தேவைப்படுகிறது. இதற்காக, அந்நாட்டை சேர்ந்த ரோமா கால்பந்து கிளப் அணி உதவ முன்வந்துள்ளது. தலைநகர் ரோமில் உள்ள லசாரோ மருத்துவமனைக்கு மூன்று வென்டிலேட்டர் கருவிகள் (உயிர் காக்கும் கருவி), அவசரசிகிச்சையில் எட்டு படுக்கையறைகள் வழங்க உறுதி அளித்துள்ளது. 

ரோம் அணி நிர்வாகம் வெளியிட்ட செய்தியில்,‘ கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதற்கு, நிர்வாகம் சார்பில் சிகிச்சைக்கு தேவையான கருவிகள் வழங்கப்படும். இது தவிர, எங்கள் அணி வீரர்கள், பயிற்சியாளர் குழுவை சேர்ந்தவர்களின் ஒரு நாள் சம்பளத்தை அளிக்க உள்ளோம்,’’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ரோமா அணி தலைவர், ஜிம் பலோட்டாவும் நிதி உதவி அளித்துள்ளார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?