Advertisement


‘ரிசார்ட்’ பக்கம் ஜீவன்

மார்ச் 21, 2020 18:24
 Comments  
 


Indian tennis players work on future ventures during COVID 19 forced break
 

புதுடில்லி: டென்னிஸ் போட்டி இல்லாததால், தமிழக வீரர் ஜீவன் நெடுஞ்செழியன் ‘ரிசார்ட்டில்’ கவனம் செலுத்தி வருகிறார். 

கொரோனா வைரஸ், விளையாட்டு நட்சத்திரங்களை வேறு திசைகளில் திருப்பி உள்ளது. போட்டி இல்லாததால், சில வீரர்கள் தங்களின் வியாபாரத்தை மும்முரமாக கவனித்து வருகின்றனர். இது குறித்து தமிழக டென்னிஸ் வீரர் ஜீவன் நெடுஞ்செழியன் கூறுகையில்,‘‘ தற்போது கடினமான காலகட்டம் நிலவுகிறது. மாடிப்படியில் ஓடுவது, உடற்பயிற்சி கருவிகள் உதவியுடன் பயிற்சி உள்ளிட்டவை தொடர்கிறது. இது தவிர, பாண்டிச்சேரியில் உள்ள ‘ரிசார்ட்சில்’ நேரத்தை செலவிடுகிறேன். இங்கு ஏற்கனவே டென்னிஸ், பாட்மின்டன் கோர்ட், 52 ‘வில்லா’ உள்ளன. இன்னும் நான்கு டென்னிஸ் கோர்ட்டை உருவாக்க திட்டமிட்டுள்ளேன். எதிர்காலத்தில் இந்த கோர்ட்டில் தொடரை நடத்த வேண்டும் என விரும்புகிறேன். டென்னிசிலிருந்து ஓய்வு பெற்றபின், சகோதரியுடன் இணைந்து இதில் முழுவதுமாக களமிறங்க முடிவு செய்துள்ளேன்,’’ என்றார்.

குன்னேஸ்வரன் ஏமாற்றம்

தமிழகத்தின் குன்னேஸ்வரன் கூறுகையில்,‘‘ போட்டி இல்லாத நிலையில், கடினமான காலகட்டத்தை சந்தித்து வருகிறோம். கொரோனாவின் தீவிரம் குறைந்து, மீண்டும் போட்டிகளில் பங்கேற்கும் நாள் விரைவில் வரும் என நம்புகிறோம்,’’ என்றார்.

மும்பையை சேர்ந்த புரவ் ராஜா கூறுகையில்,‘‘ டென்னிஸ் ‘ராக்கெட்’ தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறேன். எனது மனைவி முழு நேரமாக கவனித்து கொண்டாலும், தற்போது நானும் இணைந்துள்ளேன்,’’ என்றார்.

இந்திய வீராங்கனை அன்கிதா ரெய்னா கூறுகையில்,‘‘ நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களை பற்றி சிந்திக்கக்கூடாது. புனேயில் வீட்டிலேயே இருப்பதால், சமையல், புத்தகம் படிப்பது, ‘டிவி’ பார்ப்பதில் நேரத்தை செலவழிக்கிறேன்,’’ என்றார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?