Advertisement


செய்னா கலக்கம்

மார்ச் 20, 2020 23:12
 Comments  
 


Saina Nehwal shocked after Taiwanese athlete at All England tests positive for coronavirus
 

புதுடில்லி: இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடரில் பங்கேற்ற ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், செய்னா கலக்கத்தில் உள்ளார். 

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதில் தைவானை சேர்ந்த இரட்டையர் பிரிவில் மாற்று நட்சத்திரமாக இருந்த ஒருவருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 

இது குறித்து டென்மார்க்கின் ஹான்ஸ் கிறிஸ்டின் ‘டுவிட்டரில்’.வெளியிட்ட செய்தியில்,‘ கடந்த பார்சிலோனா மாஸ்டர்ஸ், இங்கிலாந்து ஓபன் தொடரில் மாற்று நட்சத்திரமாக இருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது,’ என, தெரிவித்துள்ளார். இதனால், இங்கிலாந்து ஓபனில் பங்கேற்ற இந்தியாவின் சிந்து, செய்னா, லக்சயா சென் உள்ளிட்டோர் கலக்கத்தில் உள்ளனர்.

செய்னா ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘ மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. வேறு வழியே இல்லையா,’ என, தெரிவித்துள்ளார்.

அஷ்வினி பொன்னப்பா வெளியிட்ட செய்தியில்,‘ இப்படி நடந்துவிட்டது ஏமாற்றமாக உள்ளது,’ என, தெரிவித்துள்ளார்.

இத்தொடரில் பங்கேற்காத, பிரனாய் உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்களும் இந்த செய்தியை பார்த்து அதிர்ந்து போய் உள்ளனர்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?