Advertisement


உடற்பயிற்சி அவசியம்: அஷ்வினி

மார்ச் 19, 2020 21:58
 Comments  
 


corona virus, Ashwini Ponnappa, badminton, india
 

மும்பை: கொரோனா அச்சம் காரணமாக போட்டிகள் ரத்தாகின்றன. விளையாட்டு நட்சத்திரங்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இது குறித்து இந்திய பாட்மின்டன் வீராங்கனை அஷ்வினி பொன்னப்பா கூறுகையில்,‘‘ கொரோனா வைரசால், விளையாட்டு உலகம் பாதிக்கப்பட்டுள்ளது. போட்டிகளில் பங்கேற்க அடிக்கடி பயணம் செய்தோம். தற்போது கிடைத்துள்ள இடைவெளியில், வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம். தசைகளை வலுப்படுத்தும் பயிற்சி மேற்கொள்ளலாம். மீண்டும் போட்டி நடக்கும் வரை இதை பின்பற்ற வேண்டும்,’’ என்றார்.

இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் கூறுகையில்,‘‘ இக்கட்டான நிலையை உணர முடிகிறது. மருத்துவர்களின் அறிவுரையை பின்பற்ற வேண்டும். அதே நேரம், விரைவில் டோக்கியோ ஒலிம்பிக் (ஜூலை 24– ஆக. 9) நடக்கவுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் நடப்பது எதுவும் நமது கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் பயிற்சி முகாமில் பயிற்சியை மட்டும் தொடர வேண்டும்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?