Advertisement


பீதி அடைய வேண்டாம்: லியாண்டர் பயஸ் ஆலோசனை

மார்ச் 19, 2020 21:45
 Comments  
 


Leander Paes, Tennis, India, Corono Virus
 

புதுடில்லி: ‘‘கொரோனா வைரஸ் தொற்று குறித்து பீதி அடைய வேண்டாம். வதந்திகளை நம்பி ஏமாறாமல், உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைகளை பின்பற்றினால் போதும்,’’ என, இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் குறித்து தவறான செய்திகள் வெளியாகின்றன. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். 

இதுகுறித்து இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில், ‘வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் நடத்தி வருகிறோம். இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் தேவையில்லாத வதந்திகளை பரப்புவது தவறு. இதில் மக்கள் ஏமாந்து விடக் கூடாது. 

அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சித்தால் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கலாம். உலக சுகாதார அமைப்பு (டபிள்யு.ஹெச்.ஓ.,) வழங்கிய ஆலோசனைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். 

அதே சமயம் தண்ணீரை வீணாக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். பொறுப்புள்ள குடிமகனாக இருந்து, கொரோனாவை விரட்டுவோம்’’ என, தெரிவித்திருந்தார்.

தொடர்கள் நிறுத்தம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் ஜூன் 7ம் தேதி வரை ஏ.டி.பி., மற்றும் டபிள்யு.டி.ஏ., தொடர்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு (ஐ.டி.எப்.,) சார்பில் நடத்தப்படும் தொடர்களும் வரும் ஜூன் 7 வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?