Advertisement


கங்குலிய பாருங்க... என்னையும் பாருங்க: அக்தர் புலம்பல்

மார்ச் 17, 2020 21:28
 Comments  
 


shoaib Akhtar, ganguly, cricket, bcci, pcb
 

புதுடில்லி: ‘‘இந்திய கிரிக்கெட் போர்டின் தலைவராக கங்குலி இருக்கிறார். நான் ‘டிவி’ நிகழ்ச்சியில் விவாதம் செய்து கொண்டிருக்கிறேன்,’’ என, சோயப் அக்தர் புலம்பினார்.

பாகிஸ்தான் அணி முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் 44.  சமீபத்தில், ‘டிவி’ சேனலின் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் கூறியது:

தங்களுக்கு கீழ் திறமை இல்லாத கூட்டத்தை வைத்துக்கொள்ள சிலர் விரும்புவர். இவர்களுக்கு உத்தரவிட்டு, பணிகளை செய்து முடிப்பர். இதே போன்று தான் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டும் உள்ளது. இவர்களுக்கு சாதகமான சேர்மன், கேப்டன் உள்ளிட்டோரை தேர்வு செய்கிறது. இப்படிப்பட்ட தகுதி இல்லாத கேப்டனால் களத்தில் சிறப்பாக செயல்பட முடியுமா அல்லது அணியை காப்பாற்ற முடியுமா.

சபாஷ் இந்தியா

இந்திய கிரிக்கெட் போர்டின் தலைவராக முன்னாள் கேப்டன் கங்குலி, தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராக டிராவிட் உள்ளனர். தென் ஆப்ரிக்காவை எடுத்துக்கொண்டால் முன்னாள் வீரர்களான கிரிம் ஸ்மித் இயக்குனராகவும், மார்க் பவுச்சர் பயிற்சியாளராகவும் செயல்படுகின்றனர். இப்படி பல கிரிக்கெட் போர்டுகளை, முன்னாள் வீரர்கள் சிறப்பாக நிர்வாகம் செய்கின்றனர். இதற்கு, அப்படியே எதிராக பாகிஸ்தான் நிர்வாகம் உள்ளது. முன்னாள் வீரரான எனது திறமையை பயன்படுத்துவதில்லை. கிரிக்கெட் போர்டை வழிநடத்த அனுமதி தந்திருக்க வேண்டும். ஆனால், ‘டிவி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விவாதம் செய்து வருகிறேன்,’’ என்றார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?