Advertisement


சானியா மிர்சா மகிழ்ச்சி

மார்ச் 14, 2020 21:43
 Comments  
 


Powerful Photo of Sania Mirza with Son and Tennis Racket During Fed Cup
 

புதுடில்லி: சானியா மிர்சா, தனது மகன் இஷானுடன் டென்னிஸ் களத்தில் இருக்கும் போட்டோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவின் ‘நம்பர்–1’ டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 33. மகன் இஷான் பிறந்ததை அடுத்து இரண்டு ஆண்டுகள் விலகியிருந்த இவர், ஹோபர்ட் தொடரில் உக்ரைனின் நாடியாவுடன் இணைந்து கோப்பை வென்று சாதித்தார்.

ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்றில் வீழ்ந்த இவர் காயத்தால் அவதிப்பட்டார். இதில் இருந்து மீண்டு, சமீபத்தில் நடந்த பெடரேஷன் கோப்பை டென்னிஸ் தொடரில் களமிறங்கினார். சக வீராங்கனை அன்கிதா ரெய்னாவுடன் இணைந்து வெற்றி பெற்றார்.

அப்போது வலது கையில் டென்னிஸ் ராக்கெட், இடது பக்கம் மகன் இஷானை இடுப்பில் வைத்துக் கொண்டு எடுத்த போட்டோவை தற்போது வெளியிட்டார். இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதில் சானியா கூறியது:

இந்த போட்டோவில் எனது வாழ்க்கை உள்ளது. எனக்கு இதைத்தவிர வேறு வழியில்லை. பல்வேறு விஷயங்களில் இஷான் எப்போதும் எனக்கு ஊக்கம் தந்து கொண்டுள்ளான். என்னால் முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்பட துாண்டுகோலாக உள்ளான்.

இந்தோனேஷியாவுக்கு எதிரான முக்கிய போட்டிக்கு முன்பு மகனுடன் நேரத்தை செலவிட்டது சரியான விஷயம். இதில் வெற்றி பெற்று உலக குரூப் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முதன் முறையாக முன்னேறியது மகிழ்ச்சி.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?