Advertisement


டேவிஸ் கோப்பை: பயஸ் ஜோடி வெற்றி

மார்ச் 07, 2020 21:05
 Comments  
 


Ramkumar pushes Cilic before defeat, Prajnesh bites dust, India trail against Croatia
 
ஜாகெரப்: குரோஷியா அணிக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் பைனல்ஸ் தகுதிச்சுற்றுப்போட்டி, இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பயஸ், போபண்ணா ஜோடி வெற்றி பெற்றது. இந்திய அணி 1–2 என பின்தங்கி உள்ளது. 

உலகின் பல்வேறு பகுதிகளில் அணிகளுக்கு இடையே டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. குரோஷியாவின் ஜாகெரப்பில் நடக்கும் பைனல்ஸ், தகுதிச்சுற்றுப்போட்டியில் இந்தியா, குரோஷியா அணிகள் மோதுகின்றன. இதன் முதல் ஒற்றையர் பிரிவு போட்டியில், தமிழகத்தின் குன்னேஸ்வரன், எதிரணியின் போர்னா ஜோகோவை எதிர் கொண்டார். இதில் குன்னேஸ்வரன் 6–3, 4–6, 2–6 என தோல்வியடைந்தார்.

இரண்டாவது ஒற்றையர் போட்டியில், தமிழகத்தின் ராம்குமார் ராமநாதன் (182வது இடம்), தரவரிசையில் 37வது இடத்தில் உள்ள மரின் சிலிச்சை சந்தித்தார். யு.எஸ்., ஓபன் (2014), முன்னாள் சாம்பியனான இவருக்கு ராம்குமார் சவால் தந்தார். முதல் செட்டை 6–7 என இழந்த ராம்குமார், அடுத்த செட்டையும் 6–7 என போராடி பறிகொடுத்தார். இரண்டு மணி நேரம், 12 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில், ராம்குமார் 6–7, 6–7 என வீழ்ந்தார். .

பயஸ் அசத்தல்

இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் பயஸ், போபண்ணா ஜோடி, மடே பாவிச், பிரான்கோ ஜோடியை எதிர் கொண்டது. சிறப்பாக செயல்பட்ட பயஸ், போபண்ணா ஜோடி 6–3, 6–7, 7–5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி 1–2 என பின்தங்கி உள்ளது. 

கொரோனா அச்சம்

கொரோனா வைரஸ், டேவிஸ் கோப்பையிலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பான்– ஈகுவடார் (இடம்: ஜப்பான்), தென் கொரியா– இத்தாலி (இடம்: இத்தாலி) அணிகள் மோதிய போட்டிக்கு ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பந்து எடுத்துத்தரும் சிறுவர், சிறுமிகள் கைகளில் ‘கிளவுஸ்’ அணிந்திருந்தனர். வீரர்கள் தரும் பந்துகளை கைகளில் வைத்துக்கொள்ளாமல், ஒரு ‘பக்கெட்டில்’ போட்டு வைத்திருந்தனர். வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்குவதற்குப்பதில், கைவிரல்களை மடக்கி சக வீரருடன் முட்டி நட்பு பாராட்டினர்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?