Advertisement


டோக்கியோ ஒலிம்பிக்: செய்னா கோரிக்கை

மார்ச் 01, 2020 18:53
 Comments  
 


Extend Oly qualification period in view of cancellation of events due to coronavirus, Saina
 

புதுடில்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக முன்னேறும் காலகட்டத்தை நீட்டிக்க வேண்டும் என இந்திய பாட்மின்டன் நட்சத்திரங்களான செய்னா, காஷ்யப் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஜப்பானின் டோக்கியோவில் வரும் ஜூலை 24ல் ஒலிம்பிக் போட்டி துவங்குகிறது. இதற்கான பாட்மின்டன் போட்டிக்கு, ஏப்ரல் 28ம் தேதி அடிப்படையில் தரவரிசையில் ‘டாப்–16’ நட்சத்திரங்கள் முன்னேறுவர். சீன மாஸ்டர்ஸ், வியட்நாம் சாலஞ்ச் உள்ளிட்ட தொடர்களில் சிறப்பாக செயல்பட்டால் தரவரிசையில் முன்னேற்றம் ஏற்படும். ஆனால், இத்துடன் சேர்த்து நான்கு தொடர்கள் ‘கோவிட்–19’ (கொரோனா) வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது, நட்சத்திரங்களின் தரவரிசையில் பாதிப்பை ஏற்படுத்தலாம். 

இது குறித்து, 22வது இடத்திலுள்ள இந்திய வீராங்கனை செய்னா ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘ பல பாட்மின்டன் தொடர்கள் ‘கோவிட்–19’ வைரஸ் பாதிப்பால் ஒத்திவைக்கப்படுகிறது. சில தொடர்கள் ரத்தாகின்றன. டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தரவரிசை அடிப்படையில் நேரடியாக முன்னேறும் காலகட்டம் நீட்டிக்கப்பட வேண்டும்,’ என, தெரிவித்துள்ளார்.

செய்னா கணவரும், இந்திய வீரருமான காஷ்யப் (24வது இடம்) ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘ ஜெர்மன் ஓபன் ரத்து செய்யப்பட்டுவிட்டன. சுவிட்சர்லாந்து, மலேசிய ஓபன் உள்ளிட்ட தொடர்களும் நடப்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்திற்குள், தரவரிசையில் முன்னேற்றத்தை சந்திப்பது சவாலானது,’ என, தெரிவித்துள்ளார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?