Advertisement


ரொனால்டோ மகனுக்கு மவுசு

பிப்ரவரி 29, 2020 21:45
 Comments  
 


Cristiano Ronaldo eldest son, speaks in FOUR languages, he debuts on Instagram
 

லிஸ்பான்: போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மகன் ரொனால்டோ ஜூனியர் ‘இன்ஸ்டாகிராம்’ கணக்கை துவக்கினார். 24 மணி நேரத்திற்குள் பின்பற்றும் ரசிகர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியது.

போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ 35. ‘பிபா’ சார்பில் வழங்கப்படும், சிறந்த வீரருக்கான பாலன் டி ஆர் விருதை ஐந்து முறை வென்றுள்ளார். யுவன்டஸ் கிளப் அணி சார்பில் விளையாடி வருகிறார். இவரது மூத்த மகன் ரொனால்டோ ஜூனியர் 9. இவரது தாய் யார் என்பதை கிறிஸ்டியானோ ரொனால்டோ ரகசியமாக வைத்துள்ளார்.

இந்நிலையில், மகன் ரொனால்டோ ஜூனியருக்கும் மவுசு அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் தந்தையை போல ‘சிக்ஸ் பேக்’ கட்டுடலுடன் காட்சி அளிக்க  ‘ஜிம்மில்’ கடின பயிற்சியை மேற்கொள்கிறார். சமீபத்தில், சமூகவலைதளமான ‘இன்ஸ்டாகிராமில்’ கணக்கை துவக்கினார். இதை, ஆங்கிலம், ஸ்பானிஷ் உட்பட நான்கு மொழிகளில் பகிர்ந்து கொண்டார். 

கணக்கை துவக்கிய, 24 மணி நேரத்திற்குள் ரொனால்டோ ஜூனியரை பின்பற்றுவோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியது. இவர் வெளியிட்ட ‘செல்பி வீடியோவை’ முதல் 20 மணி நேரத்திற்குள் 26 லட்சம் பேர் பார்த்தனர். தனது தந்தை மற்றும் சகோதர, சகோதரிகளுடன் குளிப்பது போல இவர் வெளியிட்ட புகைப்படத்தையும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?