Advertisement


சோதனை வென்ற சோபியா

பிப்ரவரி 23, 2020 18:45
 Comments  
 


Sophia Floersch, laureus award, car race
 

 கார்பந்தயத்தில் மோசமான விபத்தில் சிக்கிய சோபியா, துணிச்சலுடன் மீண்டும் போட்டியில் பங்கேற்றார். தற்போது, லாரியஸ் விருதை வென்று மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்கிறார். 

ஜெர்மனியை சேர்ந்த கார்பந்தய வீராங்கனை சோபியா புளோரிஸ் 19. கடந்த 2018, நவம்பரில் மக்காவு கிராண்ட்பிரிக்ஸ் தொடரில், வான் ஆமர்ஸ்போர்ட் ரேசிங் அணி சார்பில் களமிறங்கினார். 276 கி.மீ., வேகத்தில் இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்த சோபியா கார் விபத்தில் சிக்கியது. வளைவில் திரும்பும் இடத்தில், கார் கட்டுப்பாட்டை இழக்க புகைப்படக்கலைஞர்கள் அமர்ந்திருந்த மேடைக்குள் பாய்ந்தது. 

11 மணி நேர ‘ஆப்பரேஷன்’

இதில், பலத்த காயம் அடைந்த சோபியாவுக்கு முதுகு தண்டுவடப்பகுதியில் 11 மணி நேரம் ‘ஆப்பரேஷன்’ நடந்தது. அடுத்த சில நாட்கள் கழுத்தை திருப்புவதற்கு முடியாமல் அவதிப்பட்டார். இக்கட்டான நிலையிலும், தனது கனவை விட்டுவிடவில்லை. அடுத்த நான்கு மாதத்தில் மீண்டும் கார் பந்தயத்தில் சீறிப்பாய்ந்து ரசிகர்களுக்கு வியப்பு தந்தார். மோசமான விபத்திலிருந்து துணிச்சலுடன் மீண்டு வந்ததால், சமீபத்தில் லாரியஸ் அமைப்பு சார்பில் ‘மீண்டு வந்த நட்சத்திரத்திற்கான’ விருதை வென்றார். 

சோபியா கூறுகையில்,‘‘ மோசமான விபத்தில் சிக்கிய ‘வீடியோவை’ பார்த்து அதிர்ந்து போனேன். இந்த நிகழ்வை என்னால் மறக்கவே முடியாது. இதிலிருந்து மீண்டு சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என விரும்பினேன். விபத்து நடந்த 106வது நாளில் மீண்டும் போட்டியில் பங்கேற்றேன்.  லாரியஸ் விருது கையில் வைத்திருப்பதை நம்பவே முடியவில்லை,’’ என்றார். 

 

 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?