Advertisement


டோக்கியோ ஒலிம்பிக் நடக்குமா

பிப்ரவரி 23, 2020 18:39
 Comments  
 


tokyo olympic, marathon, covid 19
 

‘கோவிட்–19’ என்ற கொரோனா வைரஸ் பரவல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் ரத்தாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

சீனாவின் உஹானில் கடந்த டிசம்பரில் ‘கோவிட்–19’ வைரஸ் பரவியது. இதனால் ஒட்டுமொத்த சீனாவும் நிலை குலைந்துள்ளது. இங்கு நடக்க இருந்த பாட்மின்டன், தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தொடர்கள் ரத்தாகின. தவிர உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவி வருகிறது. 

சீன நட்சத்திரங்கள் பங்கேற்க இருந்த ஆசிய கால்பந்து போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டன. பல ஒலிம்பிக் தகுதி போட்டிகள் ரத்தாகின. இந்தியாவில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க சீன நட்சத்திரங்களுக்கு அனுமதி தரப்படவில்லை. பங்கேற்ற மற்ற நாட்டு நட்சத்திரங்களும் முக கவசத்துடன் தான் விளையாடினர். 

சமீபத்தில் மேற்கு ஜப்பானில் மாரத்தான் ஓட்டம் நடந்தது. வழக்கமாக இதில் பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர். ‘கோவிட்–19’ அச்சம் காரணமாக, பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. சில நுாற்றுக்கணக்கில் மட்டும் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர். அதிகமானோர் முக கவசத்துடன் வந்தனர். 

இதனிடையே ஜப்பானின் டோக்கியோ நகரில் ஜூலை 24–ஆக. 9 வரை ஒலிம்பிக் நடக்க உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிகள், ஒலிம்பிக் திட்டமிட்டபடி நடக்கும் என்கின்றன. 

ஆனால் உலகம் முழுவதும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சீனாவில் மட்டும் 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அவதிப்படுகின்றனர். 

ஒலிம்பிக் துவங்க இன்னும் 151 நாட்களே உள்ளதால், திட்டமிட்டபடி நடக்காது என்றே தெரிகிறது. 

ஜப்பானின் வைரஸ் தடுப்பு பிரிவு பேராசிரியர், டாக்டர் ஹிடோஷி ஒஷிடானி கூறுகையில்,‘‘பாதுகாப்பான முறையில் ஒலிம்பிக்கை நடத்த புதிய வழி தேவைப்படுகிறது. இப்போதுள்ள நிலையில் எந்த திட்டமும் கையில் இல்லை. இதனால், ஒலிம்பிக் நடப்பது சிக்கல் தான். ஜூலை மாதம் நிலைமை மாறலாம்,’’ என்றார்.

இதற்கு முன்...

கடந்த 1919ல் முதல் உலகப் போர் காரணமாக ஒலிம்பிக் ரத்தானது. இரண்டாவது உலகப் போர் காரணமாக 1940, 1944ல் ஒலிம்பிக், குளிர்கால ஒலிம்பிக் என இரண்டும் ரத்தாகின. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?