Advertisement


இந்தியாவின் ‘போல்ட்’ சீனிவாஸ்

பிப்ரவரி 15, 2020 22:41
 Comments  
 


Rijiju calls Kambala racer for trial under top coaches, to be assessed in SAI Bengaluru
 

புதுடில்லி: கம்பாளா எருது விழாவில், முதல் 100 மீ., ஓட்டத்தை 9.55 வினாடியில் கடந்து அசத்தினார் கர்நாடகாவின் சீனிவாஸ்.

கர்நாடகாவில் நடக்கும் புகழ்பெற்ற எருது விடும் விழா கம்பாளா. இரண்டு எருதுகளை பிடித்தபடி, வீரர் ஒருவர் பின்தொடர்வார். பந்தய துாரத்தை விரைவில் கடப்பவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்படுவர். மங்களூருவுக்கு அருகே உள்ள அய்கலா கிராமத்தில் கம்பாளா விழா நடந்தது. இதில் சீனிவாஸ் கவுடா 28, துடிப்பாக செயல்பட்டார். இலக்கின் முதல் 100 மீ.,யை, 9.55 வினாடியில் கடந்தார். மொத்தம் உள்ள 145 மீ., துாரத்தை 13.62 வினாடியில் கடந்து வெற்றி பெற்றார். ‘உலகின் மின்னல் வேக மனிதன்’ என அழைக்கப்படும், ஜமைக்கா தடகள வீரர் போல்டின் உலக சாதனை 9.58 வினாடி. இதை, சீனிவாஸ் முறியடித்துள்ளார். இதனால், இவர் இந்தியாவின் போல்ட் என சமூகவலைதளத்தில் புகழப்படுகிறார்.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு ‘டுவிட்டரில்’ வெளியிட்டுள்ள செய்தியில்,‘ கர்நாடகாவை சேர்ந்த சீனிவாஸ் கவுடாவை, பெங்களூருவில் உள்ள மத்திய விளையாட்டு ஆணையத்திற்கு வருமாறு அழைத்துள்ளேன். இவரது திறமைக்கான சோதனை நடக்கவுள்ளது. இந்தியாவை சேர்ந்த எந்தவொரு திறமையாளரையும் வீணடிக்க மாட்டோம்,’ என, தெரிவித்துள்ளார்.

கணக்கீடு சரியா

விளையாட்டுத்துறை நிபுணர் ஒருவர் கூறுகையில், ‘‘ சீனிவாஸ் கவுடா, எருதுகளின் பின்னால் நின்றுதான் ஓடி உள்ளார். இதை எப்படி திறமையாக கருத முடியும். பந்தய துாரத்தை கடந்த வினாடியை, எப்படி துல்லியமாக கணக்கிட்டனர். சர்வதேச தடகள போட்டியில், கடிகாரத்தின் உதவியுடன் மட்டுமே கணக்கிடுகின்றனர். இந்த நிலையில், சீனிவாஸ் 9.55 வினாடியில் ஓடியதை எப்படி ஏற்க முடியும்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?