சென்னை: சென்னை கார்பந்தயத்தில் நேற்று நடந்த போட்டியில் பெல்ஜியம் வீரர் அமெண்டோலா, முதலிடத்தில் உள்ளார்.
சென்னை இருங்காட்டுக் கோட்டையில் எம்.ஆர்.எப் சேலஞ்ச் சர்வதேச கார் பந்தயம் நடக்கிறது. நேற்று மூன்று ‘ரேஸ்’ நடந்தன. பெல்ஜியத்தின் 18 வயது வீரர் அமெண்டோலா, ‘ரேஸ்’ 1, 3ல் வெற்றி பெற, 209 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். ஜோர்டானின் மானப் ஹிஜவாய், ‘ரேஸ்’ 2ல் வெற்றி பெற்றார்.
மூன்று ‘ரேஸ்’ முடிவில் அமெண்டோலா (209), ஆஸ்திரேலியாவின் டயலன் யங் (175), பிரிட்டனின் ஜோஷுவா (160), ஹிஜவாய் (13) முதல் நான்கு இடங்களில் உள்ளனர். இன்று மீதமுள்ள மூன்று ‘ரேஸ்’ நடக்கின்றன.