Advertisement


ஸ்மிருதி மந்தனா ‘நம்பர்–4’

பிப்ரவரி 14, 2020 19:01
 Comments  
 


ICC Womens T20 International Rankings, Smriti Mandhana, Jemimah Rodrigues, Harmanpreet Kaur
 

துபாய்: ஐ.சி.சி., பெண்கள் ‘டுவென்டி–20’ போட்டிக்கான ‘பேட்டிங்’ தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 4வது இடத்துக்கு முன்னேறினார்.

சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. ‘பேட்டிங்’ தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, 732 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருந்து ‘நம்பர்–4’ இடத்துக்கு முன்னேறினார். இவர், சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் நடந்த முத்தரப்பு ‘டுவென்டி–20’ தொடரில் 2 அரைசதம் உட்பட அதிகபட்சமாக 216 ரன்கள் குவித்தார்.

மற்றொரு இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் (663 புள்ளி) 7வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஹர்மன்பிரீத் சிங் (643) 9வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். முதல் மூன்று இடங்களில் சுசீ பேட்ஸ் (765, நியூசி.,), சோபி டெவின் (741, நியூசி.,), பெத் மூனி (738, ஆஸி.,) நீடிக்கின்றனர். மற்றொரு ஆஸ்திரேலிய வீராங்கனை மேக் லானிங் (715) 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ராதா யாதவ், தீப்தி சர்மா தலா 726 புள்ளிகளுடன் 4வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் மேகன் ஷட் (746) நீடிக்கிறார். ‘ஆல்–ரவுண்டர்’ தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா (224) 16வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி (403) தொடர்கிறார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?