Advertisement


அரையிறுதியில் போபண்ணா ஜோடி

பிப்ரவரி 14, 2020 18:58
 Comments  
 


Rotterdam Open Tennis, Rohan Bopanna, Denis Shapovalov, Semi Final
 

ரோட்டர்டாம்: ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் போபண்ணா, கனடாவின் ஷபோவலோவ் ஜோடி முன்னேறியது.

நெதர்லாந்தில், ஏ.டி.பி., ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் ஜோடி, நெதர்லாந்தின் ஜீன்–ஜூலியன் ரோஜர், ருமேனியாவின் ஹோரியா டெகாவ் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 6–2 எனக் கைப்பற்றிய போபண்ணா ஜோடி, 2வது செட்டை 3–6 என இழந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் ‘சூப்பர் டை பிரேக்கரில்’ எழுச்சி கண்ட இந்தியா–கனடா ஜோடி 10–7 என வென்றது.

முடிவில் போபண்ணா, ஷபோவலோவ் ஜோடி 6–2, 3–6, 10–7 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?