Advertisement


மூன்றாவது சுற்றில் குன்னேஸ்வரன்

பிப்ரவரி 12, 2020 21:04
 Comments  
 


Bengaluru Open Tennis, Prajnesh Gunneswaran, Ramkumar Ramanathan, Paes
 

பெங்களூரு: பெங்களூரு ஓபன் சாலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றுக்கு இந்தியாவின் குன்னேஸ்வரன், ராம்குமார் ராமநாதன் முன்னேறினர்.

பெங்களூருவில், ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், ஜெர்மனியின் செபாஸ்டியன் பேன்செலோ மோதினர். இதில் அசத்தலாக ஆடிய குன்னேஸ்வரன் 6–2, 4–6, 6–4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு 2வது சுற்று போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் 6–1, 6–3 என்ற நேர் செட் கணக்கில் சகவீரர் அபினவ் சஞ்ஜீவ் ஷண்முகத்தை தோற்கடித்தார். இந்தியாவின் சித்தார்த் ரவாத் 6–2, 6–2 என, சகவீரர் ரிஷி ரெட்டியை வென்றார்.

காலிறுதியில் பயஸ்: இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டென் ஜோடி 7–6, 6–4 என, சுலோவேனியாவின் பிளாஸ் ரோலா, சீனாவின் ஜிஜென் ஜாங் ஜோடியை வீழ்த்தியது.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் குன்னேஸ்வரன், சுமித் நாகல் ஜோடி 3–6, 4–6 என, சுவீடனின் ஆன்ட்ரி கோரன்ஸ்சன், இந்தோனேஷியாவின் கிறிஸ்டோபர் ரங்கட் ஜோடியிடம் வீழ்ந்தது.

இந்தியாவின் சாகேத் மைனேனி, ஆஸ்திரேலியாவின் மாட் ரெய்டு ஜோடி 6–3, 6–1 என, இந்தியாவின் ரவிக்குமார், வசிஷ்ட் செருகு ஜோடியை வென்றது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?