Advertisement


கால்பந்து: அசத்துமா சென்னை

பிப்ரவரி 08, 2020 21:24
 Comments  
 


chennai soccer team, isl match
 

சென்னை: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் இன்று சென்னை, ‘நடப்பு சாம்பியன்’ பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் நடக்கிறது. சென்னை, மும்பை உள்ளிட்ட 10 அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் ‘டாப்–4’ இடம் பெறும் அணிகள் அரையிறுதி ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

கோவா அணி (33) அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. கோல்கட்டா (30), பெங்களூரு (28), மும்பை (26) அடுத்த 3 இடத்தில் உள்ளன. சென்னை 21 புள்ளியுடன் 5வதாக உள்ளது. இன்று தனது 15வது போட்டியில் சொந்தமண்ணில் பெங்களூருவை சந்திக்கிறது.

தொடரின் துவக்கத்தில் தொடர்ந்து சறுக்கியது சென்னை. பின் பயிற்சியாளர் ஓவன் கோயல் வருகைக்குப் பின் எழுச்சி பெற்றது. கடைசியாக பங்கேற்ற 4 போட்டிகளில் 15 கோல் அடித்த சென்னை, தொடர்ந்து வெற்றி பெற்று, அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைத்தது.

இத்தொடரில் அதிக கோல் அடித்த வீரர்களில் ‘நம்பர்–1’ ஆக உள்ள வால்ஸ்கிஸ் (12 கோல்), கிரிவெல்லாரோ (6), ஸ்கீம்ரி (4), இந்திய வீரர் சாங்டே (4) என பலரும் நல்ல ‘பார்மில்’ உள்ளனர். இன்றும் இது தொடரும் பட்சத்தில் தொடர்ந்து ஐந்தாவது வெற்றியை பதிவு செய்யலாம்.

பெங்களூரு அணிக்கு வழக்கம் போல சுனில் செத்ரி (9 கோல்) பலம் சேர்க்கிறார். இவருக்கு எரிக் (2), பிரவுன் (1), ஹாவோகிப், ஆஷிக், உடாண்டா சிங் என வேறு யாரும் பெரியளவு கைகொடுக்காதது ஏமாற்றம் தான். கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சாந்து இருப்பது கூடுதல் பலம். இத்தொடரின் முதல் மோதலில் 3–0 என சென்னையை வீழ்த்தியது உற்சாகத்துடன் செயல்பட உதவும்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?