Advertisement


ஹாக்கி: பெல்ஜியத்தை வீழ்த்தியது இந்தியா

பிப்ரவரி 08, 2020 19:06
 Comments  
 


India stun world champions Belgium in FIH Pro League match
 

புவனேஸ்வர்: புரோ ஹாக்கி லீக் போட்டியில் அசத்திய இந்திய அணி, ‘உலக, ஐரோப்பிய சாம்பியன்’ பெல்ஜியத்தை 2–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் புரோ லீக் தொடரின் 2வது சீசன் முக்கிய நகரங்களில் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜெர்மனி உட்பட அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 போட்டியில் மோதும். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடந்த இரண்டாவது சுற்றில் இந்திய அணி (தரவரிசையில் 5வது இடம்), ‘நம்பர்–1’ அணியான பெல்ஜியத்தை எதிர் கொண்டது.

மன்தீப் அபாரம்

துவக்கத்திலேயே இந்திய அணி அசத்தியது. போட்டியின் 2வது நிமிடத்தில் மன்தீப் சிங் இந்திய அணிக்கு முதல் கோல் அடித்தார். இதற்கு பதிலடி தர கிடைத்த ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் பெல்ஜியம் சொதப்பியது.  முதல் 30 நிமிட முடிவில் இந்திய அணி 1–0 என முன்னிலை பெற்றது.

கைகொடுத்த ராமன்தீப்

ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் பெல்ஜியத்திற்கு கிடைத்த ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் போக்கார்டு பதிலடி தந்தார். ராமன்தீப் (46வது நிமிடம்) கைகொடுக்க, இந்திய அணியின் கோல் எண்ணிக்கை இரண்டாக மாறியது. கடைசி 2வது நொடியில், பெல்ஜியத்திற்கு ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பு கிடைத்தது. இதை கோல்கீப்பர் ஸ்ரீஜேஸ் தடுத்து அசத்தினார். முடிவில், இந்திய அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியாவின் இரண்டு கோல்கீப்பர்களான பதாக், ஸ்ரீஜேசின் துடிப்பான செயல்பட்டால் வெற்றி வசமானது.

‘ஹாட்ரிக்’ வெற்றி

நெதர்லாந்துக்கு எதிரான முதல் சுற்றில் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. நேற்று ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. புள்ளிப்பட்டியலில், இதுவரை 3 போட்டியில் 3 வெற்றியுடன், இந்திய அணி 8 புள்ளியுடன் 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பெல்ஜியம் (11) நீடிக்கிறது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?