Advertisement


பயிற்சியாளராக பயஸ்

பிப்ரவரி 07, 2020 21:32
 Comments  
 


Paes wants to create champions after retirement
 

புனே: இந்திய டென்னிஸ் வீரர் பயஸ், ஓய்வுக்குப்பின் பயிற்சியாளராக மாற விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்திய சீனியர் டென்னிஸ் வீரர் பயஸ் 46. கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 18 கோப்பை (8 ஆண்கள் இரட்டையர், 10 கலப்பு இரட்டையர்) வென்றுள்ளார். விரைவில் ஓய்வு பெறவுள்ள பயஸ் கூறுகையில்,‘‘ இந்தியாவின் டிராவிட் (கிரிக்கெட்), கோபி சந்த் (பாட்மின்டன்) உள்ளிட்டோர் தங்களின் ஓய்வுக்குப்பின் இளம் நட்சத்திரங்களை உருவாக்கி வருகின்றனர். இவர்களின் வழியை நானும் பின்பற்ற விரும்புகிறேன்.

ஓய்வு பெற்றாலும், சாம்பியன் வீரரை உருவாக்க வேண்டும். கிராண்ட்ஸ்லாம் அரங்கில் கோப்பை மற்றும் ஒலிம்பிக்கில் பங்கேற்க வைக்க முயற்சி செய்வேன். கிரிக்கெட், பாட்மின்டன், கபடி என பல விளையாட்டில் லீக் தொடர் நடத்தப்படுகிறது. இதைப்போல டென்னிசுக்கும் கொண்டு வருவது அவசியம். குழந்தைகளின் கவனத்தை சிதறடிக்க பல விஷயங்கள் உள்ளன. இதைத்தாண்டி, டென்னிசின் மூலம் இவர்களை ஒருங்கிணைக்க முடியும்,’’ என்றார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?