Advertisement


டேவிஸ் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு

பிப்ரவரி 06, 2020 21:02
 Comments  
 


Rohit Rajpal to continue as India Davis Cup captain, Paes remains in mix
 

புதுடில்லி: குரோஷியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் பைனல்ஸ் தகுதிச்சுற்றுப் போட்டிக்கான இந்திய அணியில் பயஸ், குன்னேஸ்வரன் இடம்பிடித்துள்ளனர்.

சர்வதேச அளவில் அணிகளுக்கு இடையே டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பைனல்ஸ் தகுதிச்சுற்றில் இந்தியா, குரோஷியா அணிகள் மோதுகின்றன. குரோஷியாவின் ஜாக்ரெப்பில் வரும் மார்ச் 6–7ல் நடக்கவுள்ள இப்போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கடந்த முறை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், விளையாடாத கேப்டனாக இருந்த ரோகித் ராஜ்பால் தனது பதவியில் தொடர்கிறார்.

வருகிறார் குன்னேஸ்வரன்

ஒற்றையர் பிரிவில், புது மாப்பிள்ளை குன்னேஸ்வரன் அணிக்கு திரும்பி உள்ளார். சுமித் நாகல், ராம்குமார் ராமநாதன் இடத்தை தக்கவைத்துக்கொண்டனர். இரட்டையர் பிரிவில் கடந்த முறை பங்கேற்காத போபண்ணா, திவிஜ் சரண், சீனியர் வீரர் பயசுடன் இணைகின்றனர். ஜீவன் நெடுஞ்செழியனுக்கு இடம் கிடைக்கவில்லை.

கேப்டன் ராஜ்பால் கூறுகையில்,‘‘ குரோஷியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை போட்டிக்கும் கேப்டனாக செயல்படுவேன். என் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் பொறுப்பை வழங்கிய இந்திய டென்னிஸ் சங்கத்திற்கு நன்றி,’’ என்றார்.

அணி விவரம்: குன்னேஸ்வரன், சுமித் நாகல், ராம்குமார் ராமநாதன், போபண்ணா, திவிஜ் சரண், பயஸ். கேப்டன்: ரோகித் ராஜ்பால்

 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?