Advertisement


ஆதித்யா ஆசை

பிப்ரவரி 02, 2020 13:17
 Comments  
 


Adithya Ashok, tamilnadu, new zealand
 

 ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணிக்காக விளையாடும் விருப்பத்தில் உள்ளார் நியூசிலாந்தின் ஆதித்யா.

தமிழகத்தின் வேலுாரில் பிறந்தவர் ஆதித்யா அசோக் 17. நான்கு வயதில் பெற்றோருடன் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தார். சுழற்பந்துவீச்சாளரான இவர், தற்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான நியூசிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜூனியர் உலக கோப்பை தொடரில் பங்கேற்று வருகிறார். 

ஆதித்யா கூறுகையில்,‘‘ இந்தியாவில் பிறந்தாலும், நியூசிலாந்து சொந்த மண் போல மாறிவிட்டது. இரு அணிகள் மோதிய போட்டியிலும், நியூசிலாந்துக்குத்தான் ஆதரவு தருவேன். எங்கிருந்து வந்துள்ளோம் என்பது முக்கியம் இல்லை. ஜீத் ராவல், இஷ் சோதி போன்ற இந்திய வம்சாவளி வீரர்கள் நியூசிலாந்துக்காக விளையாடி வருகின்றனர். இதன் மூலம், எந்த அளவுக்கு இங்கு மதிப்பு அளிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். 

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் போல உருவெடுக்க விரும்புகிறேன். எனது இலக்கு நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வேண்டும். ஐ.பி.எல்., தொடரில், சென்னை அணிக்காக விளையாட வேண்டும். தனிப்பட்ட முறையில் சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரை பிடிக்கும். 38 வயதிலும் இவரது செயல்பாடு, வெற்றி வியப்பு தருகிறது,’’ என்றார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?