Advertisement


இளம் இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி

ஜனவரி 24, 2020 21:55
 Comments  
 


ICC U19 World Cup, Cricket, India, New Zealand, Hat Trick Win
 

புளோயம்போன்டைன்: உலக கோப்பை (19 வயது) லீக் போட்டியில் அசத்திய இந்திய அணி 44 ரன் வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி நியூசிலாந்தை வீழ்த்தியது.

தென் ஆப்ரிக்காவில், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. புளோயம்போன்டைன் நகரில் நடந்த லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, நியூசிலாந்து  அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

இந்திய அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால், திவ்யான்ஷ் சக்சேனா ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்தார்.

இந்திய அணி 21 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 103 ரன் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. மழை நின்ற பின், தலா 23 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. சக்சேனா தன்பங்கிற்கு அரைசதமடித்தார்.

இந்திய அணி 23 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 115 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால் (57), சக்சேனா (52) அவுட்டாகாமல் இருந்தனர்.

ரவி அபாரம்: பின், 23 ஓவரில் 192 ரன்கள் (‘டக்வொர்த் லீவிஸ்’) எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 21 ஓவரில் 147 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. ரைஸ் மரியு (42), பெர்கஸ் லெல்மேன் (31) ஆறுதல் தந்தனர். இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் 4, அதர்வா 3 விக்கெட் கைப்பற்றினர்.

ஏற்கனவே இலங்கை, ஜப்பான் அணிகளை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்த இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்து 6 புள்ளிகளுடன் ‘ஏ’ பிரிவில் முதலிடத்தை கைப்பற்றியது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?