Advertisement


கோஹ்லி ‘75’

ஜனவரி 24, 2020 21:41
 Comments  
 


virat kohli, india, new zealand, twenty 20 match
 
‘டுவென்டி–20’ போட்டிகளில் அதிக பவுண்டரி அடித்த இந்திய அணி கேப்டன் வரிசையில் தோனியை நேற்று சமன் செய்தார் கோஹ்லி. இருவரும் தலா 75 பவுண்டரிகள் அடித்துள்ளனர். 

 2

முதல் போட்டியில் 6 விக்கெட்டில் சாதித்த இந்திய அணி, நியூசிலாந்து மண்ணில் இரண்டாவது ‘டுவென்டி–20’ வெற்றியை பதிவு செய்தது. கடந்த 2019ல் இங்கு முதல் (ஆக்லாந்து) வெற்றி பெற்றது இந்தியா. 

சிறந்த ‘சேஸ்’ 

அன்னிய மண்ணில் நடந்த ‘டுவென்டி–20’ போட்டிகளில் இந்திய அணியின் சிறந்த ‘சேஸ்’ ஆக நேற்றைய வெற்றி (204/4) அமைந்தது. தவிர, இந்திய அணியின் சிறந்த ‘சேஸ்’ வரிசையில் இது மூன்றாவது இடம் பெற்றது. முதல் இரு இடத்தில் 208 (விண்டீஸ், 2019, ஐதாரபாத்), 207 (இலங்கை, 2009, மொகாலி) ரன்கள் உள்ளன. 

4

சர்வதேச ‘டுவென்டி–20’ல் அதிக முறை 200 ரன்னுக்கும் மேல் ‘சேஸ்’ செய்து வென்ற அணிகள் வரிசையில் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது. இதுவரை 4 முறை இதுபோல சாதித்தது. ஆஸ்திரேலியா (2) 2வதாக உள்ளது. 

தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, விண்டீஸ், இங்கிலாந்து, வங்கதேசம், கத்தார் அணிகள் தலா ஒரு முறை இதுபோல அசத்தின. 

5

சர்வதேச ‘டுவென்டி–20’ ல் ஐந்து பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்த முதல் போட்டியாக இந்தியா, நியூசிலாந்து மோதல் அமைந்தது. இந்தியா சார்பில் ஸ்ரேயாஸ் (58), ராகுல் (56), நியூசிலாந்தின் மன்ரோ (59), வில்லியம்சன் (51), ராஸ் டெய்லர் (54) அரைசதம் அடித்தனர்.

பும்ரா காயமா

நேற்று 20வது ஓவரை பும்ரா வீசினார். 2வது பந்தை வீசிய போது இடது கணுக்கால் லேசாக வழுக்கியது. இதனால் மைதானத்தில் உட்கார்ந்து விட்டார் பும்ரா. நல்லவேளையாக சில நிமிடங்களுக்குப் பின் எழுந்து பந்து வீச்சை தொடர்ந்தார்.

இரண்டே நாளில்...

இந்திய அணி கேப்டன் கூறுகையில்,‘‘நியூசிலாந்து வந்திறங்கி இரண்டு நாள் தான் ஆனது. அதற்குள் இப்படி ஒரு வெற்றி கிடைத்துள்ளது. இது ஒட்டுமொத்த தொடரிலும் சிறப்பாக செயல்பட உதவும். 80 சதவீத ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்ததாக உணர்கிறோம். 200 ரன்னுக்கும் மேல் ஸ்கோரை ‘சேஸ்’ செய்யும் போது, இதுபோன்ற ஆதரவு மிக முக்கியமாக தேவைப்படும். எங்களது பீல்டிங்கில் இன்னும் முன்னேற்றம் தேவைப்படுகிறது,’’ என்றார். 

66

முதல் 6 ஓவரில் 68 ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணிக்கு, இந்தியாவுக்கு எதிரான ‘டுவென்டி–20’ அரங்கில் ‘பவர் பிளே’ ஓவர்களில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆனது. இதற்கு முன் 2019ல் வெலிங்டன் போட்டியில் 66 ரன்கள் எடுத்திருந்தது.

6 ஆண்டுக்குப் பின்...

ஆக்லாந்தில் 54 ரன்கள் எடுத்த ராஸ் டெஸ்லர், சர்வதேச ‘டுவென்டி–20’ல் ஆறு ஆண்டுக்குப் பின் அரைசதம் அடித்தார். இதற்கு முன் 2014ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 62 ரன் எடுத்தார். 

* நேற்று 26 ரன் எடுத்த போது ‘டுவென்டி–20’ கிரிக்கெட்டில் 6000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இவர் 269 போட்டியில் 6,024 ரன் எடுத்துள்ளார். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?