Advertisement


இங்கிலாந்து நிதான ஆட்டம்

ஜனவரி 24, 2020 21:37
 Comments  
 


South Africa, England, 4th Test, Cricket, Johannesburg, Zak Crawley
 

ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 4வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்தின் ஜாக் கிராலே அரைசதம் கடந்தார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2–1 என, முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் ஜோகனஸ்பர்க் நகரில் நடக்கிறது. மழையால் போட்டி துவங்குவதில் தாமதமானது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராலே, டாம் சிப்லே ஜோடி நல்ல துவக்கம் தந்தது. பொறுப்பாக ஆடிய கிராலே அரைசதமடித்தார். முதல் விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்த போது சிப்லே (44) அவுட்டானார். பிலாண்டர் ‘வேகத்தில்’ கிராலே (66) வெளியேறினார். ஜோ டென்லி (27) நிலைக்கவில்லை. பென் ஸ்டோக்ஸ் (2) ஏமாற்றினார்.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சமின்மையால் முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. ஜோ ரூட் (25), போப் (22) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் பிலாண்டர், ஹென்டிரிக்ஸ், நார்ட்ஜே, பாட்டர்சன் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?