Advertisement


டேபிள் டென்னிஸ்: இந்திய அணிகள் ஏமாற்றம்

ஜனவரி 24, 2020 21:32
 Comments  
 


Indian men, women disappoint in Olympic qualifier, table tennis
 

கோன்டோமர்: ஒலிம்பிக் தகுதி டேபிள் டென்னிஸ் போட்டி‘ரவுண்டு–16’ சுற்றில் இந்திய ஆண்கள், பெண்கள் அணி வீழ்ந்தன.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 24ல் ஒலிம்பிக் போட்டி துவங்குகிறது. இதில் பங்கேற்கும் டேபிள் டென்னிஸ் அணிகளுக்கான தகுதிச்சுற்று போர்ச்சுகலில் நடக்கிறது.இந்திய ஆண்கள் அணி ‘ரவுண்டு–16’ சுற்றில் சுலோவேனியாவை சந்தித்தது. 

இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சரத் கமல், ஹர்மீத் தேசாய் ஜோடி 3–0 என டேனி, டோகிச் ஜோடியை வீழ்த்தியது. பின், நடந்த மூன்று ஒற்றையர் போட்டியிலும் சத்யன், ஹர்மீத், சரத் கமல் ஜோடி எதிரணி வீரர்களிடம் வீழ்ந்தனர். முடிவில், இந்திய அணி 1–3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

போராடிய வீராங்கனைகள்

பெண்கள் பிரிவு ‘ரவுண்டு–16’ சுற்றில் இந்திய அணி ருமேனியாவுடன் மோதியது. முதலில் நடந்த இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சுசித்ரா,ஆய்கா முகர்ஜிஜோடி 2–3 என மான்ட்ரியோ, சமரா ஜோடியிடம் வீழ்ந்தது. அடுத்த நடந்த ஒற்றையர் போட்டிகளில் மணிகா பத்ரா வென்றபோதும், ஆய்கா வீழ்ந்தார். கடைசி ஒற்றையர் போட்டியில் சுசித்ரா வெற்றி பெற, இரு அணிகளும் 2–2 என சமநிலையை எட்டின. வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி ஒற்றையர் போட்டியில் மணிகா பத்ரா 1–3 என சரிந்தார். முடிவில், இந்தியா 2–3 என்ற கணக்கில் வீழ்ந்தது. இதில் வீழ்ந்தபோதும், ‘ரவுண்டு–16’ சுற்றில் தோற்ற அணிகளுக்கு இடையே மற்றொரு மோதல் நடக்கவுள்ளது. இதில் சாதித்தால் ஒலிம்பிக்கிற்கு முன்னேறலாம். 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?