Advertisement


கேப்டன் விராத் கோஹ்லி ‘நம்பர்–1’: ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில்

ஜனவரி 24, 2020 20:45
 Comments  
 


ICC Test Ranking, Cricket, Virat Kohli, Rahane, Bumrah
 

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணி கேப்டன் கோஹ்லி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி 928 புள்ளிகளுடன் ‘நம்பர்–1’ இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இந்திய வீரர் புஜாரா (791 புள்ளி) 6வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இந்தியாவின் அஜின்கியா ரகானே (759) 9வது இடத்தில் இருந்து 8வது இடத்துக்கு முன்னேறினார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஹராரேயில் நடந்த முதல் டெஸ்டில் இரட்டை சதமடித்து வெற்றிக்கு வித்திட்ட இலங்கையின் மாத்யூஸ் (669), 8 இடங்கள் முன்னேறி 16வது இடத்தை கைப்பற்றினார். மற்ற இலங்கை பேட்ஸ்மேன்களான குசால் மெண்டிஸ் (26வது இடம்), தனஞ்செயா டி சில்வா (37வது) முன்னேற்றம் கண்டனர்.

பவுலர்களுக்கான பட்டியலில் இந்தியாவின் பும்ரா (6வது இடம், 794 புள்ளி), அஷ்வின் (8வது இடம், 772 புள்ளி), முகமது ஷமி (10வது இடம், 771 புள்ளி) ஆகியோர் ‘டாப்–10’ பட்டியலில் நீடிக்கின்றனர். முதலிடத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பட் கம்மின்ஸ் (904) தொடர்கிறார்.

‘ஆல்–ரவுண்டர்’ தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (3வது இடம், 406 புள்ளி), அஷ்வின் (5வது இடம், 308 புள்ளி) ‘டாப்–5’ வரிசையில் தொடர்கின்றனர். முதலிடத்தில் விண்டீசின் ஜேசன் ஹோல்டர் (473) உள்ளார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?