Advertisement


ரன் ‘அசுரன்’ ராகுல்... ‘பட்டாஸ்’ ஸ்ரேயாஸ்

ஜனவரி 24, 2020 11:59
 Comments  
 


India vs New zealand, first twenty 20, auckland
 

ஆக்லாந்து, ஜன. 25–

முதல் ‘டுவென்டி–20’ போட்டியில் ஜொலித்த இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்து அசத்தினர்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஆக்லாந்து, ஈடன் பார்க் மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பீல்டிங் தேர்வு செய்தார்.

மன்ரோ அரைசதம்

நியூசிலாந்து அணிக்கு கப்டில், மன்ரோ ஜோடி மின்னல் வேக துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 80 ரன் சேர்த்த போது, கப்டில் (30), ரோகித்தின் ‘சூப்பர்’ கேட்ச்சில் திரும்பினார். மன்ரோ 42 பந்தில் 59 ரன்கள் எடுத்தார். கிராண்ட்ஹோம் ‘டக்’ அவுட்டானார். அரைசதம் அடித்த கேப்டன் வில்லியம்சன் (51) சகால், ‘சுழலில்’ சிக்கினார்.  ‘டுவென்டி–20’ அரங்கில் 6 ஆண்டுகள் கழித்து அரைசதம் அடித்தார் ராஸ் டெய்லர். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 203 ரன்கள் எடுத்தது. ராஸ் டெய்லர் (54), சான்ட்னர் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

ராகுல் கலக்கல்

கடின இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. ரோகித் சர்மா 7 ரன்னுக்கு அவுட்டானார். பின் லோகேஷ் ராகுலுடன் இணைந்தார் கோஹ்லி. டிக்னெர் பந்தில் கோஹ்லி சிக்சர் அடிக்க, மறுபக்கம் ராகுல், சவுத்தீ, சான்ட்னர் பந்துகளில் பவுண்டரி, சிக்சர் என விளாசினார். ரன் குவிப்பில் ‘அசுரனாக’ மிரட்டிய ராகுல், 23 பந்தில் அரைசதம் அடித்தார். இந்திய அணி 9 ஓவரில் 107/1 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

திடீர் சறுக்கல்

இதன் பின் திடீரென சரிவு ஏற்பட்டது. ராகுல் (56), கோஹ்லி (45) சீரான இடைவெளியில் வெளியேறினர். சான்ட்னர் ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த ஷிவம் துபே (13) நீடிக்கவில்லை. இதனால் சற்று ‘டென்ஷன்’ ஏற்பட்டது. கடைசி 30 பந்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 53 ரன்கள் தேவைப்பட்டன.

ஸ்ரேயாஸ் அபாரம்

கடைசி கட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே கலக்கினர். படபட ‘பட்டாஸ்’ போல ‘சரவெடியாக’ ரன் சேர்த்த ஸ்ரேயாஸ், சவுத்தீ, சோதி பந்துகளை சிக்சருக்கு அனுப்ப, வெற்றியை நெருங்கியது இந்தியா. சவுத்தீயின் 19வது ஓவரின் முதல் இரு பந்தில் சிக்சர், பவுண்டரி அடித்தார் ஸ்ரேயாஸ். பின் கடைசி பந்தில் ஒரு ‘சூப்பர்’ சிக்சர் அடிக்க இந்திய அணி 19 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்து, கலக்கல் வெற்றி பெற்றது.

அரைசதம் கடந்த ‘ஆட்ட நாயகன்’ ஸ்ரேயாஸ் (58), மணிஷ் பாண்டே (14) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி 1–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?