Advertisement


வார்னர் 5000

ஜனவரி 14, 2020 22:30
 Comments  
 


india, australia, one day cricket, warner
 

வார்னர், 10 ரன் எடுத்த போது ஒருநாள் அரங்கில் 5000 ரன்கள் என்ற மைல்கல்லை வேகமாக எடுத்த ஆஸ்திரேலிய வீரர் ஆனார். இவர் 115 இன்னிங்சில் இந்த இலக்கை எட்டினார். இதற்கு முன் டீன் ஜோன்ஸ் (128) முதலிடத்தில் இருந்தார். 

* சர்வதேச அளவில் ஆம்லா (101, தெ.ஆப்.,), கோஹ்லி (114, இந்தியா) முதல் இரு இடத்தில் உள்ளனர். வார்னர் (115) 3வதாக உள்ளார்.

258

பின்ச், வார்னர் ஜோடி 258 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி ஆகினர். இதற்கு முன் இதே ஜோடி, 2017ல் 231 ரன்கள் எடுத்தது.

* இரு அணிகள் இடையிலான ஒருநாள் அரங்கில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் எடுத்த ஜோடி என்ற பெருமையும் பெற்றனர். இதற்கு முன் 2016ல் ஸ்மித், பெய்லி ஜோடி 3வது விக்கெட்டுக்கு 242 ரன் எடுத்தது அதிகமாக இருந்தது.

10

முதல் போட்டியில் 10 விக்கெட்டில் வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் அரங்கில் விக்கெட் அடிப்படையில் மிகச் சிறந்த வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன் 1980ல் சிட்னி போட்டியில் 181 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியா, 9 விக்கெட்டில் வெற்றி பெற்றிருந்தது.

* நியூசிலாந்து (1981), விண்டீஸ் (1997), தென் ஆப்ரிக்காவுக்கு (2000, 2005) அடுத்து, இந்திய அணிக்கு எதிரான 10 விக்கெட்டில் வென்ற அணியானது ஆஸ்திரேலியா. 

15

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் 2வது விக்கெட்டுக்கு அதிக முறை 100 ரன்னுக்கும் மேல் சேர்த்த முதல் அணி ஆனது இந்தியா. 15 முறை இந்திய சார்பில் இதுபோல ரன்கள் எடுக்கப்பட்டன. விண்டீஸ் (14), இங்கிலாந்து (12) இரண்டு, மூன்றாவதாக உள்ளன. 

பட்டம்...பதட்டம்

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 49 ஓவர் முடிந்த நிலையில் மைதானத்தில் திடீரென பட்டம் ஒன்று பறந்து வந்து விழுந்தது. அம்பயர்கள் இதை அகற்றிய பின், சில நிமிடங்கள் தாமதமாக போட்டி தொடர்ந்தது.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?