Advertisement


‘கேலோ’ இந்தியா: தமிழக அணிக்கு தங்கம்

ஜனவரி 14, 2020 22:19
 Comments  
 


khelo india youth games, tamil nadu, gold
 

கவுகாத்தி: கேலோ இந்தியா விளையாட்டில் ஆண்கள் அணிக்கான 4*400 மீ., ‘ரிலே’ ஓட்டத்தில் தமிழக அணி தங்கம் வென்றது.

அசாமின் கவுகாத்தியில் ‘கேலோ’ இந்தியா யூத் விளையாட்டு நடக்கிறது. இதன் ஆண்கள் (17 வயது) அணிக்கான 4*400 மீ., ‘ரிலே’ ஓட்டத்தில் தமிழகத்தின் முகமது அனாஸ், முகமது சயீத், அரவிந்த் ஆகாஷ், செந்தில் குமார் அசத்தினர். பந்தய துாரத்தை 3:22.73 நிமிடத்தில் கடந்து தங்கத்தை தட்டிச்சென்றது. கேரளா, அரியானா அணிகள் முறையே வெள்ளி, வெண்கலம் வென்றன. டேபிள் டென்னிஸ் பெண்கள் அணிக்கான பைனலில் (21 வயது) மத்திய பிரதேச அணி 11–4, 11–9, 11–3, 11–3 என மகாராஷ்டிராவை வீழ்த்தியது. 

இதே பிரிவில், ஆண்களுக்கான பைனலில் தெலுங்கானா அணி 9–11, 12–10, 12–10, 5–11, 11–8, 11–6 என மகாராஷ்டிராவை தோற்கடித்து தங்கம் வென்றது. பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் (21 வயது) ‘ரிதமிக்’ பிரிவில் 14.30 புள்ளிகள் பெற்ற மகாராஷ்டிராவின் ஆதித்தி தங்கம் வென்றார். 

ஒட்டுமொத்தமாக தமிழக அணி 9 தங்கம், 17 வெள்ளி, 10 வெண்கலம் என 36 பதக்கங்களுடன் ஒரு இடம் முன்னேறி 7வது இடம் பிடித்தது. முதலிடத்தில் மகாராஷ்டிரா 107 பதக்கங்களுடன் (26 தங்கம், 31 வெள்ளி, 50 வெண்கலம்) முதலிடத்தில் நீடிக்கிறது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?