Advertisement


கோஹ்லியை விட சிறந்தவரா ரோகித்: பாக்., முன்னாள் வீரர் வியப்பு

ஜனவரி 14, 2020 22:09
 Comments  
 


Virat Kohli is a great player, but Pakistan legend names player whose batting gives him satisfaction
 

புதுடில்லி: ‘‘விராத் கோஹ்லி சிறந்த வீரர் தான். ஆனால், ரோகித் சர்மாவின் அழகான ‘ஷாட்’ பார்க்கும் போது பரம திருப்தி ஏற்படுகிறது,’’ என, பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாகிர் அபாஸ் தெரிவித்தார்.

இந்திய அணியில் கேப்டன் கோஹ்லி, துணைக் கேப்டன் ரோகித் இடையே ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் கோஹ்லி (78 போட்டி, 2689 ரன்) முதலிடத்தில் உள்ளார். ரோகித் (104 போட்டி, 2633) அடுத்த இடத்தில் உள்ளார். 

இவர்கள் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாகிர் அபாஸ் ‘யூ டியூப்’ சேனலுக்கு அளித்த பேட்டி:

கோஹ்லி சிறந்த பேட்ஸ்மேன். ஆனால்,  ரோகித்தின் ‘ஷாட்’ பார்க்கும்போது அதிக திருப்தி ஏற்படுகிறது. இவர் களத்தில் இருந்தால், ‘டிவி’யை அணைக்க மாட்டேன். அழகான ஓவியம் போல நேர்த்தியான ‘ஷாட்’ அடிக்கிறார். இந்த திறமை கோஹ்லியிடம் காணப்படவில்லை. அதே நேரம் இந்திய அணியின் முதுகெலும்பாக கோஹ்லி திகழ்கிறார். ரோகித்தின் ஆட்டம்தான் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

சரியான முறை

இந்திய கிரிக்கெட் போர்டிடம் அதிகமான பணம் இருக்கிறது. இதை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு சரியான முறையில் செலவு செய்கின்றனர். உள்ளூர் போட்டிக்கான ‘சிஸ்டத்தில்’ பெரிய அளவு மாற்றம் செய்வது இல்லை. இதனால், உலக கிரிக்கெட் அரங்கில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துகிறது. முன்பு கவாஸ்கர் அடுத்து சச்சின், இப்போது கோஹ்லி என தொடர்ந்து திறமையான வீரர்கள் உருவாகின்றனர். வீரர்கள் இடையே பொறாமை உணர்வு இல்லை. பாகிஸ்தானை போல, இந்திய வீரர்கள் அரசியலில் குதிப்பதும் கிடையாது.

இவ்வாறு ஜாகிர் அபாஸ் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?