Advertisement


‘ஹெல்மெட்’ அடி: பன்ட் காயம்

ஜனவரி 14, 2020 19:09
 Comments  
 


Rishabh Pant under observation for concussion, India
 

 மும்பை: கம்மின்ஸ் வீசிய பந்து தாக்கியதில் இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் காயம் அடைந்தார். 

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் போட்டி மும்பை, வான்கடே மைதானத்தில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச், பீல்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் ரோகித் சர்மா, ஜடேஜா, முகமது ஷமி அணிக்கு திரும்பினர். ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் லபுசேன் அறிமுக வாய்ப்பு பெற்றார். 

போட்டியின் 44வது ஓவரை கம்மின்ஸ் வீசினார். பவுன்சராக வந்த 2வது பந்து ரிஷாப் பன்ட் பேட்டில் உரசிச் சென்று ‘ஹெல்மெட்’ மீது மோதி ‘கேட்ச்’ ஆனது. இதன் பின் மைதானத்தை விட்டு அவராகவே வெளியேறினார். அடுத்த சில நிமிடங்களில் இவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டதாக தெரிகிறது. 

இந்திய அணி பேட்டிங் முடிந்த பின் நடந்த பயிற்சியில் ரிஷாப் பன்ட் பங்கேற்கவில்லை. இதனால் இவருக்குப் பதில் லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பராக களமிறங்கினார். மாற்று வீரராக மணிஷ் பாண்டே பீல்டிங் செய்தார். இரண்டு ஓவர் முடிந்த பின் இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் அறிக்கை வெளியானது. இதில்,‘ பேட்டிங் செய்த போது ‘ஹெல்மெட்டில்’ பந்து தாக்கியதால், ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து பன்ட் மீள வில்லை. இவர் கண்காணிப்பில் உள்ளார் இவருக்குப் பதில் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படுவார்,’ என தெரிவித்தது. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?