Advertisement


சோதனை தேவையா கோஹ்லி * சோகத்தில் ரசிகர்கள்

ஜனவரி 14, 2020 17:49
 Comments  
 


India vs australia mumbai odi, kohli
 

மும்பை: இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் போட்டி மும்பை, வான்கடே மைதானத்தில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச், பீல்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் ரோகித் சர்மா, ஜடேஜா, முகமது ஷமி அணிக்கு திரும்பினர். ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் லபுசேன் அறிமுக வாய்ப்பு பெற்றார்.

முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தவான், ரோகித் சர்மா ஜோடி துவக்கம் கொடுத்தது. பேட்டிங் ஆர்டரில் 4வது இடத்தில் களமிறங்கிய கோஹ்லி, 16 ரன்னுக்கு அவுட்டானார். வழக்கமாக கோஹ்லி 3வது இடத்தில் சிறப்பாக செயல்படுகிறார். 

சராசரி 63.00 ரன்னுக்கும் மேல் வைத்துள்ளார். தற்போது ராகுலுக்கு இடம் தருகிறேன் என்ற பெயரில் இவர், 4வது இடத்தில் களமிறங்க முடிவு செய்துள்ளார் போல. கடந்த 2015க்குப் பின் கோஹ்லி 4வது இடத்தில் களமிறங்கிய போட்டிகளில் 9, 4, 3, 11, 12, 7 மற்றும் 16 என ஒருமுறை கூட அரைசதம் அடிக்கவில்லை. ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிகளுக்கு எதிராக இந்த சோதனை முயற்சி தேவையா என ரசிகர்கள் புலம்புகின்றனர்.

ஒரு ரசிகர் கூறுகையில்,‘‘கோஹ்லியின் மிகப்பெரிய பலம் 3வது இடம் தான். இந்த இடத்தை மாற்றவே கூடாது,’’ என்றார். 

மற்றொரு ரசிகர்,‘‘டியர் கோஹ்லி, உங்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து 3வது இடத்தில் பேட்டிங் செய்யுங்கள். 4வது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் பொருத்தமாகத் தான் உள்ளார்,’’ என்றார். 

‘கோஹ்லி தொடர்ந்து நான்காவது இடத்தில் பேட்டிங் செய்யக் களமிறங்கினால், கிரிக்கெட் பார்ப்பதையே நிறுத்தி விடுவேன்,’ என்கிறார் ஒரு ரசிகர்.  

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?