Advertisement


ஆயிரம் ரன்கள் எடுத்த ஐந்தாவது இந்தியர்

ஜனவரி 14, 2020 14:48
 Comments  
 


india, australia, odi, mumbai, dhawan
 

மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் அரங்கில் 1000 ரன்கள் எடுத்த ஐந்தாவது இந்தியர் ஆனார் ஷிகர் தவான்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் போட்டி மும்பை, வான்கடே மைதானத்தில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச், பீல்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் ரோகித் சர்மா, ஜடேஜா, முகமது ஷமி அணிக்கு திரும்பினர். ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் லபுசேன் அறிமுக வாய்ப்பு பெற்றார்.

முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தவான், ரோகித் சர்மா ஜோடி துவக்கம் கொடுத்தது. ரோகித் 10 ரன் எடுத்தார். தவான், 25 ரன்கள் எடுத்த போது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் அரங்கில் 1000 ரன்கள் எடுத்த ஐந்தாவது இந்திய வீரர் ஆனார். இவர் 25 போட்டியில் இந்த இலக்கை எட்டினார். முதல் நான்கு இடங்களில் சச்சின் (3,077), ரோகித் சர்மா (2,047), கோஹ்லி (1,727), தோனி (1,660) உள்ளனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?