Advertisement


தமிழக நட்சத்திரங்கள் ஆதிக்கம் * ‘கேலோ’ இந்தியா தடகளத்தில் அபாரம்

ஜனவரி 13, 2020 21:09
 Comments  
 


khelo india youth games, saran, tamil nadu
 

கவுகாத்தி: ‘கேலோ’ இந்தியா விளையாட்டு தடகளத்தில் தமிழகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை 7 தங்கம், 11 வெள்ளி, 3 வெண்கலம் என தடகளத்தில் மட்டும் 21 பதக்கங்கள் வென்றது.

அசாமின் கவுகாத்தியில் ‘கேலோ’ இந்தியா யூத் விளையாட்டு நடக்கிறது. இதில் தடகளத்தில் தமிழக நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். 21 வயது பிரிவு நீளம் தாண்டுதலில், ஐந்து வாய்ப்பு முடிவில் தமிழக வீரர் சரண், 3வது இடத்தில் இருந்தார். கடைசி, 6வது வாய்ப்பில் 7.41 மீ., தாண்டிய இவர், முதலிடம் பெற்று தங்கம் தட்டிச் சென்றார். 

போல் வால்ட் போட்டியில் (21 வயது) தமிழக வீராங்கனை பவித்ரா, 3.50 மீ., உயரம் தாண்டி தங்கம் கைப்பற்றினார். பெண்கள் ‘டிரிபிள் ஜம்ப்’ (21 வயது) போட்டியில், தமிழகத்தின் பபிஷா 12.83 மீ., நீளம் தாண்டி தங்கம் வென்றார். தமிழகத்தின் ஐஸ்வர்யா (12.41 மீ.,) வெள்ளிப்பதக்கம் பெற்றார். 

பிரதீப் அபாரம்

800 மீ., ஓட்டத்தில் (17 வயது) தமிழகத்தின் பிரதீப் செந்தில் குமார், 1:52.51 நிமிட நேரத்தில் வந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். 4*100 மீ., ‘ரிலே’ ஓட்டத்தில் (17 வயது) தமிழகத்தின் முகமது அனாஸ், அரவிந்த், விஜுஸ், முகமது சாத் அடங்கிய அணி, 0:43.48 வினாடி நேரத்தில் வந்து தங்கம் வென்றது. 

21 வயது பிரிவு 800 மீ., ஓட்டத்தில் கவுரவ் யாதவ் (1:54.38), 10,000 மீ., ஓட்டத்தில் சதீஷ் குமார் (21 வயது) என இருவரும் தமிழகத்துக்கு வெள்ளி வென்று தந்தனர். தவிர, பெண்கள் 4*100 மீ., ‘ரிலே’யில் 17, 21 வயது பிரிவுகள், ஆண்கள் 21 வயது 4*100 மீ., ‘ரிலே’ ஓட்டங்களில் தமிழக அணிக்கு வெள்ளி கிடைத்தன. 

தடகளத்தில் மட்டும் தமிழக அணி 7 தங்கம், 11 வெள்ளி, 3 வெண்கலம் என 21 பதக்கங்கள் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. ஒட்டுமொத்தமாக தமிழகம் 8 தங்கம், 12 வெள்ளி, 5 வெண்கலம் என, மொத்தம் 25 பதக்கங்கள் வென்று, பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. மஹாராஷ்டிரா (70 பதக்கம்) முதலிடத்தில் உள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?