Advertisement


தமிழகம்–மும்பை ‘டிரா’

ஜனவரி 13, 2020 21:05
 Comments  
 


Ranji trophy, tamil nadu vs mumbai
 

சென்னை: தமிழகம், மும்பை அணிகள் மோதிய ரஞ்சி கோப்பை லீக் போட்டி ‘டிரா’ ஆனது. 

இந்தியாவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. சென்னையில் நடந்த லீக் போட்டியில் தமிழகம், மும்பை அணிகள் மோதின. மும்பை அணி முதல் இன்னிங்சில் 488 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 249/7 ரன்கள் எடுத்து, 239 ரன்கள் பின் தங்கி இருந்தது. அஷ்வின் (32), சாய் கிஷோர் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.

அஷ்வின் அரைசதம்

நேற்று நான்காவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த தமிழக அணியின் அஷ்வின் அரைசதம் எட்டினார். 8வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்த போது சாய் கிஷோர் (42) அவுட்டானார். விக்னேஷ் 3 ரன் எடுக்க, அஷ்வின் 79 ரன்னுக்கு அவுட்டானார். தமிழக அணி முதல் இன்னிங்சில் 324 ரன்கள் எடுத்தது. 

அடுத்து 164 ரன்கள் பின் தங்கிய தமிழக அணி, ‘பாலோ ஆன்’ பெற்று இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. இதில் ஒரு விக்கெட்டுக்கு 48 ரன்கள் எடுத்த போது, போட்டி ‘டிரா’ ஆனதாக அறிவிக்கப்பட்டது. அபினவ் முகுந்த் (19), கவுஷிக் (3) அவுட்டாகாமல் இருந்தனர். இருப்பினும் முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் மும்பை 3, தமிழகம் 1 புள்ளிகள் பெற்றன.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?