Advertisement


ஜப்பான் பாட்மின்டன் வீரர் காயம்: மலேசிய கார் விபத்தில்

ஜனவரி 13, 2020 20:27
 Comments  
 


Kento Momota, Japan Badminton Player, Car Accident, Malaysia
 

கோலாலம்பூர்: மலேசியாவில் நடந்த கார் விபத்தில் உலகின் ‘நம்பர்–1’ பாட்மின்டன் வீரர் ஜப்பானின் கென்டோ மொமோடா காயமடைந்தார். ‘டிரைவர்’ சம்பவ இடத்தில் பலியானார்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‘நம்பர்–1’ ஜப்பானின் கென்டோ மொமோடா, டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்சனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

நேற்று அதிகாலை, மொமோடா மற்றும் அவரது பயிற்சியாளர் குழுவினர் ‘கார்’ மூலம் விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது சாலையில் மெதுவாக சென்று கொண்டிருந்த ‘லாரி’ மீது வேகமாக மோதிய ‘கார்’ விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த ‘டிரைவர்’ சம்பவ இடத்திலேயே பலியானார். மொமோடாவின் மூக்கு மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. காரில் இருந்த துணை பயிற்சியாளர், பிஸியோதெரபிஸ்ட் உள்ளிட்டோருக்கும் கை, கால், தலை பகுதியில் லேசான காயம் உண்டானது. இவர்கள் அனைவரும் உடனடியாக ‘ஆம்புலன்ஸ்’ மூலம் மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2016ல் சூதாட்டப் புகாரில் தடை விதிக்கப்பட்ட மொமோடா, கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப் உள்ளிட்ட 11 தொடர்களில் கோப்பை வென்றார். இதன்மூலம் ஒரு சீசனில் அதிக பட்டம் வென்ற வீரரானார். இந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தனது நீண்ட நாள் கனவை பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மொமோடா காயமடைந்திருப்பது பின்னடைவு.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?